Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய அரசின் வரிப்பகிர்வு விடுவிப்பு: தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி; உ.பி.க்கு ரூ.13,088.51 கோடி!

05:42 PM Dec 22, 2023 IST | Web Editor
Advertisement

மாநில அரசுகளுக்கு ஜனவரி 10-ம் தேதி வழங்க வேண்டிய வரி பகிர்வுத் தொகை ரூ.72,961.21 கோடியை மத்திய அரசு முன்கூட்டியே விடுவித்துள்ளது.  இதில், தமிழ்நாட்டிற்கு ரூ.2976.10 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

28 மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வழங்கும் வரி பகிர்வின் கூடுதல் தவணைத் தொகை ரூ.72,961.21 கோடியை முன்கூட்டியே விடுவிக்கப்பட்டுள்ளது.  வரும் ஜனவரி மாதம் 10-ம் தேதி விடுவிக்கப்பட வேண்டிய இந்த வரி பகிர்வு தவணைத் தொகை,  டிசம்பர் 11-ம் தேதியே விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பண்டிகைகள்,  வருடப் பிறப்பு ஆகியவை வர உள்ளதால், மாநில அரசுகளின் கரங்களை வலுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.  அதோடு இதன் மூலம்,  மாநிலங்கள் பல்வேறு சமூக நலத்திட்டங்களையும்,  வளர்ச்சிக்கான உள்கட்டமைப்புத் திட்டங்களையும் மேற்கொள்ள முடியும்.

மத்திய அரசின் வரி பகிர்வு:

Tags :
Central governmentGSTministry of financenews7 tamilNews7 Tamil UpdatesTamilNaduuttar pradesh
Advertisement
Next Article