Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

இந்திய வெளியுறவு அமைச்சர் #Jaishankar நாளை இலங்கை பயணம்!

04:45 PM Oct 03, 2024 IST | Web Editor
Advertisement

அரசு முறை பயணமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு பயணம் செய்கிறார்.

Advertisement

இலங்கைக்கு நாளை பயணம் மேற்கொள்ளவுள்ள எஸ். ஜெய்சங்கர், அதிபர் அனுரகுமார திஸநாயக்க மற்றும் பிரதமர் ஹரிணி அமரசூரிய ஆகியோரை மரியாதை நிமித்தம் சந்திப்பார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் அதிபர் தேர்தல் முடிந்த பின்னர் புதிய அரசு அமைந்துள்ள நிலையில், இந்நாட்டுக்கு வரும் முதலாவது வெளிநாட்டு பிரதிநிதியாக ஜெய்சங்கர் செல்கிறார். அதிபர் அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் உள்ளிட்டோரை அவர் சந்திக்கவுள்ளார்.

மேலும், தமிழ், முஸ்லிம் கட்சிகள் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடனும் மற்றும் சிவில் சமூகத்தினருடனும் இந்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு நடத்தவுள்ளார்.இந்த சந்திப்பின் போது டெல்லி வருமாறு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அழைப்பை, அதிபர் அநுரகுமாரவிடம் ஜெய்சங்கர் அளிக்கவுள்ளார். ஒருநாள் பயணமாக இலங்கை செல்லும் அவருடன், இந்தியாவின் முக்கிய உயர்மட்டத் தூதுக்குழு ஒன்றும் செல்கிறது.

இந்நிலையில், அரசு முறை பயணமாக வெள்ளிக்கிழமை இலங்கைக்கு பயணம் செய்யவுள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு தமிழக மீனவர்கள் சார்பாக 4 கோரிக்கைகளை முன்வைக்கப்பட்டுள்ளன. தேசிய பாரம்பரிய மீனவர்கள் கூட்டமைப்பினால் இந்த கோரிக்கைகள் அடங்கிய கடிதம் வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெங்சங்கருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

Tags :
JaishankarSri Lanka
Advertisement
Next Article