Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமி, பெங்காலி மொழிகளுக்கு 'செம்மொழி அந்தஸ்து’ | #UnionCabinet ஒப்புதல்!

08:52 AM Oct 04, 2024 IST | Web Editor
Advertisement

இந்தியாவில் தொன்றுதொட்ட மொழிகளாக கருதப்படும் பிராகிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Advertisement

ஒரு மொழியின் காலம், அதன் இலக்கண அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கணக்கிட்டு ஒரு மொழி செம்மொழியாக அங்கீகரிக்கப்படுகிறது. உலகம் முழுவதும் அவ்வாறாக ஒரு சில மொழிகளே செம்மொழியாக அங்கீகாரம் பெற்றுள்ளன.

இந்தியாவில் தேசிய அளவில் மத்திய அரசால் தமிழ், சமஸ்கிருதம், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா ஆகிய மொழிகள் ஏற்கனவே செம்மொழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் தற்போது மேலும் 5 மொழிகளை செம்மொழியாக அங்கீகரிக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதன்படி, மராத்தி, பாலி, பிராகிருதம், அசாமிஸ், பெங்காலி என 5 மொழிகள் செம்மொழியாக அங்கீகரிக்கப்பட உள்ளது.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள பிரதமர் மோடி “இந்தியாவின் வளமான வரலாறு மற்றும் கலாச்சாரத்தை எங்கள் அரசாங்கம் போற்றி கொண்டாடுகிறது. பிராந்திய மொழிகளைப் பிரபலப்படுத்துவதில் எங்களின் அர்ப்பணிப்பிலும் நாங்கள் அசையாது இருக்கிறோம். அஸ்ஸாமி, பெங்காலி, மராத்தி, பாலி மற்றும் பிராகிருத மொழிகளுக்கு செம்மொழி அந்தஸ்து வழங்க அமைச்சரவை முடிவு செய்ததில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்! அவை ஒவ்வொன்றும் அழகான மொழிகள், நமது துடிப்பான பன்முகத்தன்மையை எடுத்துக்காட்டுகின்றன. அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என தெரிவித்துள்ளார்.

Tags :
BaliBengalimarathiSemmozhi
Advertisement
Next Article