Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

"கடத்தல் தங்கம் கொண்டு வருவது குறையும்" - நியூஸ் 7 தமிழுக்கு ஜெயந்திலால் சலானி பேட்டி!

03:28 PM Jul 23, 2024 IST | Web Editor
Advertisement

தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6% குறைக்கப்படுவதாக மத்திய பட்ஜெட்டில் தெரிவித்திருந்த நிலையில், கடத்தல் தங்கம் கொண்டு வருவது குறையும் என ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார்.

Advertisement

2024-25 ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்தார். மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் தொடர்ந்து உரையாற்றினார். தங்கம், வெள்ளி இறக்குமதிக்கான சுங்க வரி 15 சதவீதத்திலிருந்து 6% குறைக்கப்படுவதாகவும், பிளாட்டினத்திற்கு சுங்க வரி 6.4% ஆக குறைக்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

இந்நிலையில்,மத்திய பட்ஜெட்டில் தங்கம், வெள்ளி சுங்கவரி வரி குறைப்பு குறித்து தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானி நியூஸ் 7 தமிழுக்கு பேட்டி அளித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : சவுக்கு சங்கர் மீதான குண்டர் சட்டத்திற்கு எதிரான மனு – ஜூலை 26ல் விசாரணை!

இது குறித்து அவர் கூறியதாவது :

"நடுத்தர மக்களுக்கு இது சாதகமானது. கடத்தல் தங்கம் கொண்டு வருவது குறையும். இந்த பட்ஜெட்டை வரவேற்கிறோம். சுற்றுலா பயணிகள் வெளிநாடுகள் செல்லும் போது அங்கு வாங்குவார்கள். வரி குறைந்ததால் நம் ஊரிலேயே வாங்கி கொள்ளலாம்.10 முதல் 15% வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம், நல்ல லாபம் தரும்"

இவ்வாறு அவர் நியூஸ் 7 தமிழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Tags :
#budgetsessionமத்தியபட்ஜெட்2024BJPBudgetBudget2024BudgetDayBudgetSession2024Gold and Diamond Jewelers AssociationModiGovtnarendra_modiNirmalaSitharamanparliament2024PMModiPmofIndiaPresident Jayantilal Chalani
Advertisement
Next Article