For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Atlee படத்தில் இணையும் பிரபலங்கள்? வெளியான தகவல்!

03:17 PM Sep 30, 2024 IST | Web Editor
 atlee படத்தில் இணையும் பிரபலங்கள்  வெளியான தகவல்
Advertisement

அட்லீ இயக்கத்தில் கமல்ஹாசன், சல்மான் கான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisement

பிரபலமான இயக்குநர்களில் ஒருவர் அட்லீ. இவர் ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர். இதனையடுத்து இவர் விஜய்யை வைத்து தெறி, மெர்சல் மற்றும் பிகில் ஆகிய படங்களை இயக்கினார். இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.

பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற அட்லீ, ஷாருக்கானை வைத்து ஜவான் படத்தை இயக்கினார். நயன்தாரா, தீபிகா படுகோன், பிரியாமணி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நட்சத்திரங்கள் நடித்த இப்படம் வசூலில் சாதனை படைத்தது.  இத்திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அட்லீ மிகவும் பிரபலமானார்.

இந்த நிலையில், அட்லீ இயக்கத்தில் கமல்ஹாசன், சல்மான் கான் இணைந்து நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மேலும், இத்திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது தொடர்பான அறிவிப்பு வெளியாகும் என கூறப்படுகிறது. தற்போது சல்மான் கான் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிக்கந்தர் படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Tags :
Advertisement