தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டம் | களைக்கட்டும் பல்சுவை கேக் விற்பனை!
தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகை முன்னிட்டு கேக்குகள் தயாரிக்கும் பணி
தீவிரமடைந்துள்ளது. பல்வேறு வடிவங்கள் மற்றும் சுவைகளில் தயாரிக்கப்படும் விதவிதமான கேக்குகளை பொதுமக்கள் ஆர்வமுடன் வாங்கி செல்வதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கிறிஸ்மஸ் பண்டிகை வரும் டிச.25ம் தேதி உலகம் முழுவதும் வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ள சூழலில், அதற்கான பல்வேறு முன்னேற்பாடுகளில் கிறிஸ்துவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கிறிஸ்மஸ் பண்டிகையின் போது முக்கிய பங்கு வகிக்கும் கேக்குகள் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
கிறிஸ்துமஸ் தினத்தன்று உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு கேக்குகள் கொடுத்து மகிழ்வது வழக்கம். அந்த வகையில், கிறிஸ்துமஸ் பண்டிகையின் போது முக்கிய பங்காற்றும் கேக்குகள் பல்வேறு வடிவங்கள் மற்றும் சுவைகளில் தயாரிக்கும் பணியானது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
குறிப்பாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பேக்கரிகளிலும் தற்போது
கேக்குகள் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், விற்பனையும்
அமோகமாக நடைபெற்று வருவதாக பேக்கரி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒரு கிலோ கேக்குகள் அதன் பிளேவருக்கு ஏற்றார் போல ரூ.400 முதல் ரூ.1000 வரை விற்பனையாகி வருகிறது. மேலும் இந்த பண்டிகைக்காக ப்ளம் கேக், கேரட் கேக், பேரீச்சம்பழம் கேக், பனானா கேக், பிளாக் ஃபாரஸ்ட் கேக், ஒயிட் ஃபாரஸ்ட் கேக், புட்டிங் கேக், பாம்பே புட்டிங் கேக், இத்தாலியன் புட்டிங் கேக், வால்நட் கேக் உள்ளிட்ட
கேக்குகள் தயாரிக்கும் பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இந்த வருடம் கேக் ஆர்டர்களும் அதிகளவு புக் செய்யப்பட்டுள்ளதாக பேக்கரி உரிமையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளனர்.