Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

போர் நிறுத்தம் : அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பிற்கு ஈரான் மறுப்பு!

இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.
08:21 AM Jun 24, 2025 IST | Web Editor
இஸ்ரேல் மீதான தாக்குதல் தொடரும் என்று அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது.
Advertisement

ஈரானின் அணு ஆயுத தளங்கள், ஏவுகணை மையங்கள் மீது கடந்த 13ம் தேதி ஆபரேஷன் ரைசிங் லயன் என்ற பெயரில் இஸ்ரேல் சரமாரியான வான்வழி தாக்குதல் நடத்தியது. ஈரானும் இஸ்ரேல் மீது பதில் தாக்குதல் நடத்தியது. இரு நாடுகள் இடையே போர் நடந்து வருகிறது.

Advertisement

இதற்கிடையே, இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் 3 அணு உலைகள் மீது தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்திருந்தார். இதற்கு ஈரான் அணுசக்தி கழகம் கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும் அமெரிக்க தாக்குதலில் பொதுமக்களுக்கு எந்தவித பாதிப்பில்லை என்று ஈரான் விளக்கம் அளித்துள்ளது.

இதன் காரணமாக ஈரான் அமெரிக்க விமானப்படை தளமான அல் உதெய்த் மீது அதிரடி தாக்குதல் நடத்தியது. இதனிடையே தாக்குதல் குறித்த முன்னறிவிப்புக்காக ஈரானுக்கு அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் நன்றி தெரிவித்திருந்தார். இதையடுத்து ஈரானும், இஸ்ரேலும் போர் நிறுத்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் போர்நிறுத்தம் தொடர்பாக அதிபர் டிரம்ப்பின் அறிவிப்பை ஈரான் மறுத்துள்ளது. இது தொடர்பாக ஈரானின் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ் அரக்சி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், "இஸ்ரேல் தான் முதலில் ஈரான் மீது போரை தொடங்கியது. நாங்கள் போரை தொடங்கவில்லை. தற்போது வரை, போர் நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த 'உடன்பாடும்' எட்டப்படவில்லை.

இருப்பினும், இஸ்ரேலிய ஆட்சி ஈரானிய மக்களுக்கு எதிரான சட்டவிரோத ஆக்கிரமிப்பை தெஹ்ரான் நேரப்படி அதிகாலை 4 மணிக்குள் நிறுத்தினால், அதன் பிறகு எங்கள் பதிலடியைத் தொடர எங்களுக்கு எந்த நோக்கமும் இல்லை. எங்கள் ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்த இறுதி முடிவு பின்னர் எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

Tags :
AmericaAnnouncementceasefireIranIsrealPresident Trumprejectswar
Advertisement
Next Article