Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

காசாவில் போர்நிறுத்தம் : இஸ்ரேல் - ஹமாஸ் ஒப்புதல் !

காஸா போரை முடிவுக்குக் கொண்டு வர இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் ஒப்புதல் தெரிவித்துள்ளனர்.
11:46 AM Jan 16, 2025 IST | Web Editor
Advertisement

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே இரண்டு ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபர் 7ஆம் தேதியன்று, இஸ்ரேலுக்குள் புகுந்து நூற்றுக்கணக்கானோரை பிணைக்கைதிகளாக ஹமாஸ் அமைப்பினர் பிடித்துச் சென்றனர். இதையடுத்து, காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா, எகிப்து, கத்தார் நாடுகள் முயற்சித்து வருகின்றன.

Advertisement

இதனிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டெனால்டு டிரம்ப், வருகிற 20ஆம் தேதி பதவி ஏற்க உள்ளார். தான் பதவி ஏற்று இரு வாரங்களுக்குள் பிணைக்கைதிகள் விடுவிக்கப்படவில்லை எனில் மிக மோசமான விளைவுகளை ஹமாஸ் படையினர் சந்திக்க நேரிடும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருந்தார்.
இந்த நிலையில், இஸ்ரேல்- ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தம் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் (ஜன. 19) அமலுக்கு வரும் என்று கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல் ரஹ்மான் அல் தனி தெரிவித்துள்ளார். பாலஸ்தீனிய கைதிகள் இஸ்ரேலிய பிணைக்கைதிகளை பரிமாற்றம் செய்ய இரு தரப்பும் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதன் மூலம் 15 மாதங்களாக நடைபெற்று வரும் காசா போர் முடிவுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
ceasefireGaza warHamasIsrael
Advertisement
Next Article