CBSE மாணவர்கள் கவனத்திற்கு..! ஆண்டுக்கு இனி 2 பொது தேர்வுகள்!
வரும் 2024 - 25 ஆம் கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் ஆண்டுக்கு இரண்டு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2025ஆம் கல்வி ஆண்டில் இருந்து 10 மற்றம் 12 வகுப்புகளுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை பொதுத் தேர்வு என அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வால் மாணவர்களுக்கு ஏற்படும் தேர்வு அழுத்தத்தைப் போக்க பல்வேறு நடைமுறைகள் பின்பற்றப்படுகிறது.
இதையடுத்து, ஆண்டுக்கு ஒரு முறை பொது தேர்வு நடத்தப்படுவதால், மன அழுத்தம் ஏற்படுவதாகக் கூறப்படும் நிலையில், முதல் பொதுத்தேர்வில் ஒரு மாணவர் நன்கு படித்து நல்ல மதிப்பெண் எடுப்பேன் என்று உறுதியாக இருந்தால், அந்த மாணவர்கள் இரண்டாம் பொதுத்தேர்வை எழுத வேண்டாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : மெளத் ஆர்கன் வாசித்து பிரதமர் மோடியை வியக்க வைத்த யானை!
இது குறித்து மத்திய கல்வியமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்ததாவது,
"2024 - 25ஆம் கல்வியாண்டு முதல் ஒரு கல்வியாண்டில் இரண்டு தேர்வுகள் நடத்தும் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும். மாணவர்கள் முதல் பொதுத் தேர்வை நன்கு எழுதி இருந்தால், அந்த மாணவர்கள் இரண்டாவது பொதுத் தேர்வு எழுத வேண்டாம். மேலும், இரண்டுத் தேர்வுகளும் கட்டாயமாக்கப்படாது.
முதல் பொதுத்தேர்வு 2024ல் நவம்பர் டிசம்பர் மாதங்களிலும், இரண்டாவது பொதுத் தேர்வு 2025ஆம் ஆண்டு பிப்ரவரி மார்ச் மாதங்களில் நடைபெறும். மாணவர்கள் இந்த இரண்டு பொதுத் தேர்வுகளில் எதேனும் ஒரு தேர்வில் நல்ல மதிப்பெண் பெற்றிருந்தால் அதை இறுதித் தேர்வாக எடுத்துக் கொள்ளலாம்" என தெரிவித்துள்ளார்.