வெளியான சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் - வழக்கம்போல் தேர்ச்சி விகிதத்தில் மாணவிகள் முன்னிலை!
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் (சிபிஎஸ்இ) கீழ் உள்ள பள்ளிகளில் படித்த 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடப்பு கல்வியாண்டுக்கான பொது தேர்வு நாடு முழுவதும் கடந்த பிப்ரவரி மாதம் தொடங்கி, மார்ச் மாதம் முடிவடைந்தது. அதே போல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொது தேர்வு ஏப்ரலில் முடிவடைந்தது.
இந்த நிலையில் சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. 93.60% மாணவர்கள் பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி சதவீதம் கடந்த ஆண்டை விட 0.06% அதிகரித்துள்ளது. மாணவிகள் 95% பேர் தேர்ச்சி பெற்று மாணவர்களைவிட 2.37%-த்துடன் முன்னணியில் உள்ளனர். குறிப்பாக சென்னை மண்டலத்தில் பத்தாம் வகுப்புத் தேர்வெழுதிய 98.71 % பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
வெளியாகியுள்ள சிபிஎஸ்இ 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை cbseresults.nic.in, result.cbse.nic.in, cbse.gov.in ஆகிய இணையதளங்களின் வாயிலாக மாணவர்கள் அறிந்துகொள்ளலாம்.