சிபிஎஸ்இ 10, 12-ம் வகுப்பு தேர்வுகள்: முக்கிய அறிவிப்பு
மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தின் கீழ் நடத்தப்படும் 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வு முடிவுகளின்போது, எந்த தனிப்பட்ட அறிவிப்பு அல்லது உயர் மதிப்பீட்டையோ வழங்காது என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மாணவர்களிடையே தேவையற்ற போட்டி மனப்பான்மையை தடுக்கும் வகையில் முதலிடம் பிடித்த மாணவர்கள் என்பது போன்ற எந்த ஒரு தனிப்பட்ட மாணவர்களின் பட்டியலையும் சிபிஎஸ்இ வெளியிடுவது வெகு காலமாக நிறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஒட்டுமொத்தமாக அனைத்துப் பிரிவுகளில் அதிக மதிப்பெண் எடுத்தவர்கள் என்ற எந்த தகவலையும் சிபிஎஸ்இ வெளியிடாது என்று விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்: “எந்த அவமரியாதையையும் நான் செய்யவில்லை” – ஆஸி. வீரர் மிட்செல் மார்ஷ்
இது தொடர்பாக சிபிஎஸ்இ நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளதாவது " தேர்வுகளில் மதிப்பெண் வித்தியாசம் அல்லது மதிப்பெண்களின் மதிப்பீடு என எதுவும் வழங்கப்படாது. மேலும், ஒரு மாணவர் ஐந்து பாடங்களுக்கு மேல் படித்து தேர்வெழுதினால், அதில் சிறந்த ஐந்து பாடங்களைத் தீர்மானிக்கும் முடிவை அவர்களை உயர்கல்வியில் சேர்க்கும் நிறுவனம் அல்லது வேலைக்கு தேர்வு செய்பவர்களே தேர்வு செய்து எடுத்துக் கொள்ளலாம்" என்று சிபிஎஸ்இ தேர்வுக் கட்டுப்பாட்டாளர் சன்யம் பரத்வாஜ் கூறினார்.
அதேபோல மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் தேர்வு முடிவுகளின்போது, மதிப்பெண்களின் சதவீதத்தை கணக்கிடவோ, அறிவிக்கவோ அல்லது தெரிவிக்கவோ இல்லை என்றும் பரத்வாஜ் கூறினார். உயர்கல்வி அல்லது வேலைவாய்ப்பில் மதிப்பெண்களின் சதவீதம் தேவைப்பட்டால், மாணவர்களை சேர்க்கும் கல்வி நிலையங்கள் அல்லது வேலை வாய்ப்பளிக்கும் நிறுவனங்கள் கணக்கிட்டுக் கொள்ளலாம்" என்று அவர் கூறினார்.