For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு!

07:22 AM Aug 11, 2024 IST | Web Editor
முன்னாள் ஐஜி பொன் மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளில் சிபிஐ வழக்குப்பதிவு
Advertisement

சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு முன்னாள் ஐஜி பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின் கீழ் சிபிஐ வழக்குப்பதிவு செய்தது.

Advertisement

தமிழ்நாடு கோயில்களில் இருந்து மாயமான, பழமையான சிலைகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்க தமிழ்நாடு அரசு சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவு ஐஜியாக
பொன்.மாணிக்கவேல் நியமிக்கப்பட்டிருந்தார்.

அப்போது சர்வதேசக் கடத்தல் கும்பலோடு கூட்டுச் சேர்ந்து பல கோடி ரூபாய்
மதிப்புள்ள சாமி சிலைகளை கடத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட திருவள்ளூர்
டிஎஸ்பியாக இருந்த காதர்பாஷா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தன்னை பழிவாங்கும் நோக்கில் தனக்கு எதிராக பொய் வழக்கு பதிவுசெய்த சிலைக்
கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேலுக்கு எதிராக,
சிபிசிஐடி வழக்கு பதிவு செய்யக் கோரி பணியிடைநீக்கம் செய்யப்பட்ட டிஎஸ்பி காதர் பாஷா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், சிலைக் கடத்தல் தடுப்புப் பிரிவின் முன்னாள் ஐஜி, பொன்.மாணிக்கவேல் மீதான புகாரை சிபிஐ விசாரிக்க கடந்த ஜூலை மாதம்  உத்தரவிட்டது. இதைத்தொடர்ந்து நேற்று பாலவாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். கிட்டதட்ட ஏழரை மணிநேரம் விசாரணை நடைப்பெற்றது. இந்நிலையில் பொன்.மாணிக்கவேல் மீது 13 பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது சிபிஐ. 2016 முதல் 2019 வரையிலான காலகட்டத்தில் குற்றம் நடந்ததாக குறிப்பிட்டு எஃப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
Advertisement