#Cauvery | காவிரி நீர் ஒழுங்காற்று குழு கூட்டம் தொடங்கியது!
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் தொடங்கியது.
காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 102-வது கூட்டம் அதன் தலைவர் வினீத் குப்தா தலைமையில் தொடங்கியது. இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநில நீர்வளத்துறை அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். தமிழ்நாடு சார்பில் தலைமை பொறியாளர் ஆர். தயாளகுமார் மற்றும் காவிரி தொழில் நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியன் கலந்து கொண்டுள்ளனர்.
அக்டோபர் மாதம் தர வேண்டிய 20 டி.எம்.சி. நீரை கர்நாடகா காவிரியில் திறக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தமிழ்நாடு தரப்பில் கோரிக்கை வைத்துள்ளது. அதற்கு, ஏற்கனவே 56 டி.எம்.சி. தண்ணீர் கொடுக்கப்பட்டு விட்டது. செப்டம்பர் மாதம் கொடுக்க வேண்டிய 36 டி.எம். சிக்கு பதிலாக 96 - டி.எம்.சி கொடுத்துள்ளோம் என கர்நாடகா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உபரிநீர் தான் கொடுக்கப்பட்டது என்பதால் அதை கணக்கில் கொள்ள கூடாது என தமிழ்நாடு தரப்பில், தெரிவிக்கப்பட்டுள்ளது.