Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டால் ஆண்மை நீக்கம் - மடகாஸ்கர் அரசு அதிரடி!

01:40 PM Feb 12, 2024 IST | Web Editor
Advertisement

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை நிரூபிக்கப்பட்டால் ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு அதிரடி சட்டத்தை அறிவித்துள்ளது.

Advertisement

மடகாஸ்கர் தீவு நாடு கிழக்கு ஆப்பிரிக்காவில் உள்ள இந்திய பெருங்கடலில் அமைந்துள்ளது. இந்த நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இந்நிலையில், மடகாஸ்கரில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. கடந்த ஆண்டு 600 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.  2024 ஆம் ஆண்டில் கடந்த ஜனவரி மாதம் மட்டும் 133 குழந்தைகள் பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதையும் படியுங்கள் ; ஆர்எஸ்எஸ் - பாஜகவினர் சமூகத்தில் வெறுப்புணர்வை பரப்புகின்றனர் - ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

இந்நிலையில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை குற்றங்கள் அதிகரித்து வருவதால் குற்றங்களை தடுக்கவும். குற்றவாளிகளுக்கு தண்டனையை அதிகரிக்கவும் மடகாஸ்கர் அரசு அதிரடி முடிவெடுத்துள்ளது.அந்த வகையில், குழந்தைகளுக்கு எதிராக பாலியல் வன்கொடுமை குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு ஆண்மை நீக்கம் செய்ய மடகாஸ்கர் அரசு சட்டம் கொண்டுவந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு ரசாயன ரீதியிலும், அறுவை சிகிச்சை மூலமாகவும் ஆண்மை நீக்கம் செய்ய வகை செய்யும் வகையில் கொண்டுவரப்பட்டுள்ள சட்டம் நேற்று ( பிப்.11) மடகாஸ்கர் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதையடுத்து, நிறைவேற்றப்பட்டுள்ள சட்டம் அந்நாட்டின் குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பின் அமலுக்கு வர உள்ளது.

இந்த சட்டத்தின்படி, 10 குழந்தைகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டால் குற்றவாளிக்கு அறுவை சிகிச்சை மூலம் ஆண்மை நீக்கப்படும். மேலும், ஆண்மை நீக்கம் மட்டுமின்றி பாலியல் வழக்கில் குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்படும் வகையில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மடகாஸ்கர் அரசு கொண்டுவந்துள்ள சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Tags :
#AgainstActioncastrationChild AbusechildrenLawmadagascarsex offendersSexual abuse
Advertisement
Next Article