திருநெல்வேலியில் தொடரும் சாதிய கொடுமை - மேலும் ஒரு சம்பவம்!
திருநெல்வேலியில் இரண்டு இளைஞர்கள் சாதியின் பேரில், ஆடை களையப்பட்டு சிறுநீர் கழிக்கப்பட்டு, தாக்கப்பட்ட சம்பவத்தின் அதிர்ச்சி அடங்குவதற்குள், இதே போல் மேலும் ஒரு சம்பவம் அறங்கேறியுள்ளது.
கடந்த 30-ம் தேதி திருநெல்வேலி மாநகரத்திற்கு உட்பட்ட மணி மூர்த்தீஸ்வரம் ஆற்றுப்பகுதியில் இளைஞர்கள் இரண்டு பேரை, 6 பேர் கொண்ட மர்ம கும்பல் தாக்கி அவர்களிடமிருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளனர். அவர்கள் எந்த சாதி என கேட்டு தெரிந்துகொண்ட பின், இளைஞர்களை சரமாரியாக தாக்கியுள்ளனர். தொடர்ந்து அவர்கள் மீது சிறுநீர் கழித்துள்ளனர். அவர்களை மாலை முதல் இரவு வரை வைத்திருந்து சித்தரவதை செய்தனர்.
ஊர் பெயரையும் சாதி பெயரையும் கேட்டு தாக்குதல் நடத்தியதாக படுகாயம் அடைந்த இளைஞர் குற்றம் சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக திருநெல்வேலி மாவட்டம் சிவந்திபட்டி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தாக்குதல் நடத்திய கும்பலை தேடி வருகின்றனர். மேலும் தாக்குதல் நடத்தியவர்களை தீவிரமாக தேடி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிலம்பரசன் தெரிவித்துள்ளார்.