சவுக்கு சங்கர் மீதான வழக்குகள் - கோவைக்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவு!
தன் மீது பதியப்பட்ட அனைத்து வழக்குகளையும் ரத்து செய்யக்கோரி யூடியூபர் சவுக்கு சங்கர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில்,
சவுக்கு சங்கரை பொறுத்தவரை தொடர்ச்சியாக நீதிபதிகள், பத்திரிக்கையாளர்கள் , அரசியல்வாதிகள் என அனைத்து தரப்பினரையும் தரக்குறைவாக பேசியே வருகிறார். கடந்த முறை நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணையின்போது எந்த வீடியோவும் பதிவிடக்கூடாது என உத்தரவிட்டும், அதனை மீறியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டது.
இதனைக்கேட்ட நீதிபதிகள், சவுக்கு சங்கர் மீதான அனைத்து வழக்குகளையும் பிரதான வழக்குடன் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டு, FIR No: 123/2024 சைபர் கிரைம் கோவையில் 2024 மே 3ம் தேதி பதிந்த வழக்குடன் இணைத்து விசாரிக்க உத்தரவிட்டனர்.
மேலும் (FIR :NO 10/2024) 15/5/2024 திருச்சியில் பதிவு செய்த வழக்கை மட்டும் தனியாக விசாரிக்க தெரிவித்து , அனைத்து வழக்கு புலன் விசாரணையையும் விரைந்து முடிக்க உத்தரவிட்டனர்.