Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

செவிலியர் நிமிஷா பிரியா தொடர்பான வழக்கு - மத்திய அட்டர்னி ஜெனரல் ஆஜராக உச்ச நீதிமன்றம் உத்தரவு!

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் விவகாரம் தொடர்பாக வழக்கில் ஆஜராக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
01:54 PM Aug 22, 2025 IST | Web Editor
கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் விவகாரம் தொடர்பாக வழக்கில் ஆஜராக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Advertisement

கேரள செவிலியர் நிமிஷா பிரியாவின் விவகாரம் தொடர்பாக மதபோதகர் கே. ஏ. பால் என்பவர் வழக்கு  உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கு இன்று நீதிபதி விக்ரம்நாத் தலைமையிலான அமர்வில் விசாரிக்கபட்டது. அப்போது கே.ஏ.பால் தரப்பு,

Advertisement

”நிமிஷா பிரியாவுக்கு எப்போது வேண்டுமானாலும் தூக்குத்தண்டனை நிறைவேற்றப்படும் ஆபத்து உள்ளது. ஏற்கனவே இரண்டு முறை அவரின் தண்டனை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் நிமிஷா பிரியா தொடர்பாக ஊடகங்களில் வெளியிடப்படும் செய்திகள் பாதிப்பை ஏற்படுத்துவதாக உள்ளது, பல தவறாக செய்திகள் வெளி வருகின்ற எனவே அதற்கு கட்டுப்பாடு விதிக்க வேண்டும்"என கோரினார்

வாதங்களை கேட்ட நீதிபதிகள், இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் அட்டர்னி ஜெனரல் ஆஜராக நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டனர். தொடர்ந்து வழக்கை 25ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும் அன்றைய தினம் இந்த வழக்கில் உரிய உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

நிமிஷா பிரியா விவகாரம்

கேரளா​வின் பாலக்​காட்டை சேர்ந்​தவர் நிமிஷா பிரியா  ஏமன் தலைநகர் சனா​வில் உள்ள அரசு மருத்​து​வ​மனை​யில் செவிலிய​ராக பணி​ புரிந்தௌ வந்தார். கடந்த 2015-ல் அரசு செவிலியர் பணியை ராஜி​னாமா செய்த நிமிஷா, ஏமனை சேர்ந்த  தலால் அய்டோ மெஹ்​தி​ என்பவருடன் இணைந்து அங்கு புதிய மருத்​து​வ​மனையை தொடங்​கி​னார்.

கடந்த 2017-ம் ஆண்டு மெஹ்​தியை நிமிஷா மயக்க ஊசி மருந்தை செலுத்​தி கொன்றதாக அவர் கைது செய்யப்பட்டார்.​  இந்த வழக்கை விசா​ரித்த  நீதி​மன்​றம் கடந்த 2020-ல் நிமிஷாவுக்கு மரண தண்​டனை விதித்​தது. இதை ஏமன் உச்ச நீதி​மன்​றம் உறுதி செய்​தது. இதையடுத்​து, 2025-ம் ஆண்டு ஜூலை 16-ம் நிமிஷாவுக்கு மரண தண்​டனை நிறைவேற்​றப்​படும் என்று ஏமன் அரசு அறி​வித்​திருந்​தது.

இதனை தொடர்ந்து இந்தியாவின் கிராண்ட் முஃப்தி காந்தபுரம் ஏபி அபூபக்கர் ஏமன் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இதன் பலனாக நிமிஷா பிரியாவிற்கு வழங்கப்பட இருந்த மரண தண்டனை தள்ளிப்போடப்பட்ட தாக கூறப்பட்டது.

Tags :
akpaulemankeralanurselatestNewsnimishapriyacasesupremcourt
Advertisement
Next Article