Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஆயுள் தண்டனை கைதிகள் முன்கூட்டி விடுதலை செய்வது தொடர்பான வழக்கு - #Governor குறித்து சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி!

07:06 AM Sep 11, 2024 IST | Web Editor
Advertisement

ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின், தகுந்த காரணங்கள் இல்லாமல் தமிழ்நாடு ஆளுநர் நிராகரித்ததற்கு சென்னை உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது.

Advertisement

பாளையக்கோட்டை சிறையில் உள்ள சங்கர், கோவை சிறையில் உள்ள வேலுமணி உள்ளிட்ட 10 ஆயுள் தண்டனை கைதிகள் சார்பில் முன்கூட்டியே விடுதலை செய்ய உத்தரவிடக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு குறித்த மனுவில், நன்நடத்தை அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய முதலமைச்சர் அனுமதி வழங்கி தமிழ்நாடு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டதாகவும், ஆனால் ஆளுநர் தங்களை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு ஒப்புதல் வழங்காமல் நிராகரித்து விட்டதாகவும் சுட்டிகாட்டியுள்ளனர்.

இந்த வழக்குகளை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம் மற்றும் சிவஞானம் அடங்கிய அமர்வு விசாரணை செய்தது. அப்போது, ஆயுள் தண்டனை கைதிகளை நன்நடத்தையின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக மாநில அளவிலான குழு பரிந்துரையின் அடிப்படையில், முதலமைச்சர் ஒப்புதல் அளித்த பின்பும் தகுந்த காரணங்களை கூறாமல் தமிழ்நாடு ஆளுநர் எப்படி நிராகரிக்க முடியும் என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும், இந்த விவகாரம் தொடர்பான கோப்புகளை மீண்டும் தமிழ்நாடு அரசு 8 வாரத்திற்குள் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.

Tags :
Governormadras highcourtMHCNews7TamilprisonerRN RaviTN Govt
Advertisement
Next Article