Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ரூ.3,000 கோடி மோசடி: UTS நிறுவனம் மீது 15 வழக்குகள் பதிவு!

03:54 PM Dec 22, 2023 IST | Web Editor
Advertisement

கோயம்புத்தூரைச் சேர்ந்த யுனிவர்சல் டிரேடிங் சொல்யூஷன்ஸ் பிரைவேட் லிமிடெட் (UTS) நிர்வாக இயக்குநர் கௌதம் ரமேஷ் மீது சிபிஐ 15 வழக்குகளை அடுத்தடுத்த நாட்களில் பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

UTS நிர்வாக இயக்குநர் கௌதம் ரமேஷ் மீது நாடு முழுவதிலும் உள்ள டெபாசிட்தாரர்களை சுமார் ரூ.3,000 கோடி அளவுக்கு போன்சி திட்டங்களின் மூலம் ஏமாற்றியதாக மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ) வழக்குப் பதிவு செய்துள்ளது.  அக்டோபர் 2018 முதல் நவம்பர் 2018 வரையிலான காலகட்டத்தில்,  தங்களது நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால், ஒரு வருடம் கழித்து முதலீடு செய்த பணத்தில் 10 சதவீதம் மற்றும் முதலீடு செய்த பணத்திற்கு 12 சதவீத வட்டி தருவதாக கூறி பல்வேறு நிறுவனங்களை பற்றி ஆன்லைனில் விளம்பரம் செய்துள்ளனர்.

இதனை நம்பி பலர் இந்நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர்.  ஆனால் டெபாசிட் செய்த தொகையையோ அல்லது பங்கின் லாபத்தையோ திருப்பித் தராமல் ஏமாற்றி வந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கேரளா மற்றும் தமிழ்நாட்டில் கௌதம் ரமேஷ் மீது பல்வேறு மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.  கேரள உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து,  இந்த வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.  கேரளாவில் மட்டும் 50 வழக்குகள் பதிவான நிலையில்,  சுமார் ரூ.3000 கோடி வரை மோசடி செய்துள்ளதாக குற்றம் சாட்டப் பட்டுள்ளது. மேலும் மோசடி செய்யப்பட்ட தொகையானது இன்னும் கணக்கிடப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

Tags :
CBICrimekerala high courtNews7Tamilnews7TamilUpdatesUTS
Advertisement
Next Article