Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் #RahulGandhi மீது வழக்குப்பதிவு!

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது போலீசார் இரு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
09:52 PM Jan 19, 2025 IST | Web Editor
Advertisement

டெல்லியில் கடந்த 15ம் தேதி காங்கிரஸ் கட்சியின் புதிய தலைமை அலுவலகம் திறக்கப்பட்டது. இந்த அலுவலகத்தை  நாடாளுமன்ற காங்கிரஸ் குழுத் தலைவர் சோனியா காந்தி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்பட காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.

Advertisement

இவ்விழாவில் பேசிய ராகுல் காந்தி, ‛‛நாட்டில் உள்ள அனைத்து நிறுவனங்களையும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் கைப்பற்றி உள்ளது. இப்போது நாம் (காங்கிரஸ்) பாஜக, ஆர்எஸ்எஸ் மட்டுமின்றி இந்திய அரசுக்கு எதிராகவும் போராடி வருகிறோம்’’ என்றார்.

ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. நம் நாட்டில் இருந்து கொண்டே இந்திய அரசுக்கு எதிராக போராடுகிறோம் என்று உள்நோக்கத்துடன் ராகுல் காந்தி பேசியுள்ளதாக கூறி பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்தனர். ராகுல் காந்தியின் இந்த பேச்சை கண்டித்து அசாமின் மோன்ஜித் சேத்தியா என்பவர், அங்குள்ள பான் பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரை பெற்று கொண்ட போலீசார் ராகுல் காந்தி மீது 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அதன்படி பிஎன்எஸ் சட்டப்பிரிவு 158 (இந்திய இறையாண்மைக்கு ஆபத்தை விளைவித்தல்), 191 (1) (தேச ஒற்றுமைக்கு எதிராக செயல்படுதல்) என்று 2 பிரிவுகளில் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement
Next Article