For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Dhanush தொடர்ந்த வழக்கு | நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு!

02:16 PM Dec 12, 2024 IST | Web Editor
 dhanush தொடர்ந்த வழக்கு   நயன்தாரா  விக்னேஷ் சிவன் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

தனுஷ் தொடர்ந்த வழக்கில் ஜன.8ம் தேதிக்குள் நடிகை நயன்தாரா, விக்னேஷ் சிவன் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Advertisement

கேரளாவில் பிறந்து தமிழ்மொழி வாயிலாக திரையுலகிற்கு அறிமுகமாகி, தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து நாடு முழுவதும் பிரபலமாக இருப்பவர் நடிகை நயன்தாரா. லேடி சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் இவர் பல வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தனக்கான பெரும் ரசிகர் பட்டாளத்தையே கொண்டுள்ளார்.

நயன்தாராவின் பிறந்தநாளையொட்டி கடந்த நவ.18ம் தேதி ‘நயன்தாரா – Beyond The Fairy Tale’ என்ற தலைப்பில் அவரது திருமண ஆவணப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. இதில், நயன்தாராவின் காதல் வாழ்க்கை, தனிப்பட்ட நிகழ்வுகள், அன்பு நிறைந்த திருமண தருணங்கள் மற்றும் விக்னேஷ் சிவனுடனான அவரது வாழ்க்கையைப் பற்றி விரிவாக காட்டப்பட்டுள்ளது.

முன்னதாக வெளியான இதன் டிரெய்லரில், தனுஷ் தயாரிப்பில் நயன்தாரா நடிப்பில் வெளியான ‘நானும் ரவுடிதான்’ திரைப்படத்தின் சிறு காட்சி இடம்பெற்றிருந்தது. அந்த வீடியோவுக்கு எதிராக ‘நானும் ரவுடிதான்’ படத்தின் தயாரிப்பாளர் என்ற முறையில் நடிகர் தனுஷ் ரூ. 10 கோடி இழப்பீடு கேட்டு நயன்தாராவுக்கு வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். தொடர்ந்து, நடிகர் தனுசுக்கு எதிரான அறிக்கை ஒன்று நயன்தாரா தனது இணைய பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இது திரையுலம் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சூழலில் நயன்தாராவுக்கு எதிராக, ‘வொண்டர் பார்ஸ் நிறுவனம்’ சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர அனுமதி வழங்குமாறு அதில் குறிப்பிடப்பட்டிருந்து. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் மீது வழக்கு தொடர தனுஷின் வொண்டர்பார் தயாரிப்பு நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியது.

இதனையடுத்து, அனுமதியின்றி காட்சிகளை பயன்படுத்தியதற்காக ரூ.10 கோடி இழப்பீடு வழங்கவும், காட்சிகளை பயன்படுத்த தடை கோரியும் வொண்டர்பார் நிறுவனம் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு இன்று (டிச.12) விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, ஜன.8ம் தேதிக்குள் நயன்தாரா, விக்னேஷ் சிவன், நெட்ஃபிளிக்ஸ் ஆகியோர் பதிலளிக்க உத்தரிவிட்டார். இந்த பதில் மனுக்களுக்கு, தனுஷ் தரப்பிலும் பதில் அளிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட நீதிபதி, வழக்கில் இடைக்கால தடை கோரும் மனு மீது ஜனவரி 8-ம் தேதி இறுதி விசாரணை நடத்தப்படும் என அறிவித்துள்ளார்.

Advertisement