Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

மத்திய இணை அமைச்சர் #SureshGopi மீது வழக்குப்பதிவு - கேரள போலீசார் அதிரடி!

02:20 PM Nov 03, 2024 IST | Web Editor
Advertisement

ஆம்புலன்ஸ் வாகனத்தை தவறாகப் பயன்படுத்தியதாக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது கேரள போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

கேரள மாநிலம், திரிச்சூர் பூரம் திருவிழாவிற்கு பாஜக மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி ஆம்புலன்சில் சென்ற சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை முதலில் மறுத்த அவர், பின்னர் தனது காலில் ஏற்பட்ட பாதிப்புக்காக ஆம்புலன்சில் சென்றதாக தெரிவித்தார். இவ்விவகாரம் தொடர்பாக இந்திய கம்யூனிஸ்டு நிர்வாகி தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய இணையமைச்சர் சுரேஷ் கோபி மீது திருச்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். முதல் தகவல் அறிக்கையில் (எப்.ஐ.ஆர்) திருச்சூர் பூரம் நிகழ்வின் போது மத்திய அமைச்ச்ர சுரேஷ் கோபி ஆம்புலன்சை தவறாகப் பயன்படுத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து ஆம்புலன்ஸ்களுக்கான வழித்தடங்களும் முன்பே முடிவு செய்யப்பட்டிருந்தது.

அந்த பாதை வழியாக விழா நடக்கும் இடத்துக்கு அமைச்சர்கள் கூட வருவதற்குத் தடை விதிக்கப்பட்டது. ஆனால் இந்த விதிமுறைகளை மீறி வாகனத்தை அஜாக்கிரதையாக ஓட்டி, பொதுமக்களின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக இருந்ததாக மத்திய இணையமைச்சர் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

Tags :
ambulancefirIndiaKeralanews7 tamilPolicesuresh gopi
Advertisement
Next Article