Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமார் வெற்றியை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு |  உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

01:20 PM Apr 10, 2024 IST | Web Editor
Advertisement

கிருஷ்ணகிரி தொகுதி அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமார் வெற்றிபெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில்,  சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

Advertisement

கடந்த 2021 ம் ஆண்டு நடந்த சட்டமன்ற பொதுத் தேர்தலில்,  கிருஷ்ணகிரி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட அசோக்குமார்,  794 வாக்குகள் வித்தியாசத்தில்   வெற்றி பெற்றார்.  அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது செல்லாது என அறிவிக்கக் கோரி  அத்தொகுதி திமுக வேட்பாளர் செங்குட்டுவன்,  சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்த மனுவில்,  வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தும்,  அரசு இயந்திரத்தை தனது பிரச்சாரத்துக்கு பயன்படுத்தியும் தேர்தலில் வெற்றி பெற்றதாக கூறப்பட்டது.  மேலும், வேட்புமனுவில் சொத்துக்கள் குறித்த விவரங்களை மறைத்ததாகவும்,  தபால் வாக்குகள் காரணமின்றி நிராகரிக்கப்பட்டதாகவும்,  வாக்கு எண்ணிக்கை முறையாக நடக்கவில்லை எனவும் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கின் விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.  இந்த தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரிய அதிமுக எம்.எல்.ஏ அசோக்குமாரின் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  இந்த நிலையில் நிராகரிக்கப்பட்ட 605  தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில் மீண்டும் மறு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று திமுக வேட்பாளர் செங்குட்டுவன் மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்த வழக்கில் கடந்த மாதம் உத்தரவு பிறப்பித்த சென்னை உயர் நீதிமன்றம், நிராகரிக்கப்பட்ட தபால் வாக்குகளை மீண்டும் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் எனவும் உயர்நீதிமன்ற தலைமை  பதிவாளர் இதற்கென ஒரு பதிவாளர் நியமிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

அதேபோல் தேர்தல் ஆணையமும் இரண்டு அதிகாரிகளை நியமிக்க வேண்டும் என்றும், இந்த நடவடிக்கைகளை முடித்து ஒரு மாதத்தில் அறிக்கை அளிக்க வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.   அந்த அறிக்கையில் தபால் வாக்குகள் ஏன் நிராகரிக்கப்பட்டது உள்ளிட்ட விவரங்கள் அடங்கியிருக்க வேண்டும் என்றும் உத்தவிடப்பட்டது.

இதனை எதிர்த்து அதிமுக எம்.எல்.ஏ.  அசோக் குமார் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.  இந்த வழக்கு நீதிபதிகள் சூர்யகாந்த்,  கே.வி. விஸ்வநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.  அப்போது, நிராகரிக்கப்பட்ட 605 தபால் வாக்குகளை உயர்நீதிமன்ற பதிவாளர் முன்னிலையில்  மறு எண்ணிக்கை நடத்த வேண்டுமென்ற சென்னை உயர் நீதிமன்ற உத்தரவை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Tags :
ADMKAIADMKAshokkumar MLAchennai High CourtSupremen Court
Advertisement
Next Article