Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கு - கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி!

05:57 PM May 27, 2024 IST | Web Editor
Advertisement

ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்ட வழக்கில் கெஜ்ரிவாலின் முன்னாள் உதவியாளர் பிபவ் குமாரின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Advertisement

மதுபான கொள்கை ஊழல் வழக்கில் திஹார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் ஜாமீனில் வெளியே வந்தார். அவரை சந்திக்க ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்.பி ஸ்வாதி மாலிவால்  கடந்த 13-ம் தேதி டெல்லியில் உள்ள அவரது வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார், ஸ்வாதி மாலிவாலை தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக டெல்லி போலீஸார் நேற்று முன்தினம் ஸ்வாதியின் வீட்டுக்குச் சென்று விசாரணை நடத்தினர். இதைத் தொடர்ந்து, டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்தில் ஸ்வாதி எழுத்துபூர்வமாக புகார் கொடுத்தார்.

அதில், “கடந்த 13-ம் தேதி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டுக்கு சென்றிருந்தேன். அங்கு கெஜ்ரிவாலின் தனி செயலர் பிபவ் குமார் என்னை தகாத வார்த்தைகளால் திட்டினார். எனது கன்னத்தில் பலமுறை ஓங்கி அறைந்தார். என்னை தரையில் இழுத்து தள்ளினார். இதில் எனது ஆடைகள் அலங்கோலமாகின. எனது மார்பிலும், வயிற்றிலும் அவர் எட்டி உதைத்தார்” என்று தெரிவித்துள்ளார்.

இதன்பேரில், கொலை மிரட்டல், மானபங்கம், தாக்குதல், அவதூறாக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பிபவ் குமார் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அதன்படி பிபவ் குமாரை டெல்லி போலீஸார் கைது செய்தனர். இதனைத் தொடர்ந்து கைது செய்யப்பட்ட அவரை டெல்லி சிவில் லைன் காவல் நிலையத்துக்கு கொண்டுவந்து விசாரணை செய்தனர்.

இந்த நிலையில் பிபவ் குமார் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றது.  அனைத்து தரப்பின் வாதங்களையும் கேட்ட டெல்லி தீஸ் அசாரி மாவட்ட நீதிமன்றம், பிபவ் குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.  இந்த வழக்கின் விசாரணை ஆரம்ப கட்டத்தில் இருந்து வருவதால் தற்போது ஜாமீன் வழங்கினால் விசாரணைக்கு அது முட்டுக்கட்டையாக அமைந்து விடும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Tags :
AAPBailBail Plea RejectedBibav kumarDelhiSwathi Maliwal
Advertisement
Next Article