For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஷீனா போரா கொலை தொடர்பான ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கு! சிபிஐ அதிகரிகளுக்கு திரையிட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு!

04:25 PM Feb 22, 2024 IST | Web Editor
ஷீனா போரா கொலை தொடர்பான ஆவணப்படத்திற்கு எதிரான வழக்கு  சிபிஐ அதிகரிகளுக்கு திரையிட மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவு
Advertisement

ஷீனா போரா கொலை வழக்கு தொடர்பான ஆவணப்படமான  ‘இந்திராணி முகர்ஜி பரிட் ட்ரூத்’ -ஐ சிபிஐ அதிகாரிகளுக்கு திரையிட்டு காண்பிக்க வேண்டும் என மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

Advertisement

பிரபல தனியார் தொலைக்காட்சியில் தலைமைப் பொறுப்பு வகித்த பீட்டர் முகர்ஜியின் மனைவி தான் இந்திராணி முகர்ஜி.  மகாராஷ்டிராவைச் சேர்ந்த இவர் தனது முன்னாள் கணவர் மூலம் தனக்கு பிறந்த மகள் ஷீனா போராவை கொலை செய்ததாக 2015-ம் ஆண்டு மும்பை போலீஸாரால் கைது செய்யப்பட்டார்.  பீட்டர் முகர்ஜிக்கு அவரது முன்னாள் மனைவி மூலம் பிறந்த மகன் ராகுலை,  ஷீனா முறை தவறி காதலித்ததால் இந்தக் கொலை நடந்ததாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் இந்திராணி,  அவரது முன்னாள் கணவர் சஞ்சீவ் கண்ணா,  கார் ஓட்டுநர் ஷியாம்வர் ராய் ஆகியோரும்,  பிறகு பீட்டர் முகர்ஜியும் கைது செய்யப்பட்டு,  மும்பை சிறையில் அடைக்கப்பட்டனர்.  சிபிஐ இந்த வழக்கை விசாரித்து வரும் நிலையில்,  சில மாதங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் இந்திராணி முகர்ஜிக்கு ஜாமீன் வழங்கியது.

இந்நிலையில்,  நெட்பிளிக்ஸ் நிறுவனம் ஷீனா போரா கொலை வழக்கை ஆவணப்படமாக உருவாக்கியுள்ளது.  ‘இந்திராணி முகர்ஜி பரிட் ட்ரூத்’ ( the indirani mukerjea story buried truth) எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படத்தை வரும் பிப். 23 ஆம் தேதி வெளியிட உள்ளதாக நெட்பிளிக்ஸ் அறிவித்திருந்தது.

மேலும் ஷீனா போரா காணாமல் போனதில் புதைக்கப்பட்ட உண்மைகள்  இந்த ஆவணப் படத்தின் வாயிலாக வெளியாகும் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் விளம்பரப்படுத்தியிருந்தது.  இந்நிலையில்,  ‘இந்திராணி முகர்ஜி பரிட் ட்ரூத்’ ஆவணப்படம் வெளியானால் விசாரணையை பாதிக்கலாம் என சிபிஐ தரப்பில் குற்றம் சாட்டி மும்பை உயர்நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் ரேவதி மோஹிதே தேரே மற்றும் மஞ்சுஷா தேஷ்பாண்டே ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.  அப்போது சிபிஐ அதிகாரிகளுக்கு சிறப்புத் திரையிடலை ஏற்பாடு செய்யுமாறு தயாரிப்பாளர்களுக்கு உத்தரவிட்டு வழக்கை வரும் வியாழக்கிழமைக்கு (29.02.2024) ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில்,  பிப்.29-ஆம் தேதி வரை இந்திராணி முகர்ஜி குறித்த ஆவணப்படத்தை வெளியிடமாட்டோம் என நெட்பிளிக்ஸ் நிறுவனம் மும்பை உயர்நீதிமன்றத்தில் உறுதி அளித்துள்ளது.

Tags :
Advertisement