Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கைதை எதிர்த்து தொடர்ந்த வழக்கு : அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் நிறைவு - மே 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைப்பு!

05:26 PM Apr 30, 2024 IST | Web Editor
Advertisement

கைதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்த மனு மீதான விசாரணையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதங்கள் நிறைவடைந்த நிலையில் வருகிற மே 3ம் தேதிக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Advertisement

டெல்லி புதிய மதுபான கொள்கை விவகாரத்தில் தனது கைது நடவடிக்கை சட்டவிரோதம் என அறிவிக்க கோரியும் கைதை எதிர்த்தும் அரவிந்த் கெஜ்ரிவால் தொடர்ந்த மனு  உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.  இந்த நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவித்ததாவது..

” இது தொடர்பான வழக்கில் சரத் ரெட்டி, ராகவ் மொகந்தா உட்பட பலருக்கு நீதிமன்றங்கள் இடைக்கால ஜாமீன் கொடுத்துள்ளது. ஆனால் அப்போது எந்தவித எதிர்ப்பும் தெரிவிக்காக அமலாக்கத்துறை, அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மட்டும் இத்தனை எதிர்ப்புகளை சிறப்பு நீதிமன்றம் முதல் உச்ச நீதிமன்றம் வரையில் தெரிவிப்பது ஏன் ?

நடந்து முடிந்த கோவா சட்டப்பேரவை தேர்தல் என்பது பொதுவான ஒன்றாகும். அங்கு கெஜ்ரிவால் தேர்தல் பிரசாரத்திற்கு சென்றார். ஆனால் அதனையும் டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தையும் அமலாக்கத்துறை தரப்பில் தொடர்புப்படுத்தி உள்ளது. கோவா தேர்தலின் போது ஹவாலா பணத்தை கெஜ்ரிவால் பயன்படுத்தியதாக அமலாக்கத்துறை தவறான அறிக்கையையும் தாக்கல் செய்துள்ளது” என தெரிவிக்கப்பட்டது.

மேலும் டெல்லி துணை நிலை ஆளுநரின் அனுமதியோடு தான் புதிய மதுபான கொள்கை திட்டமே கொண்டு வரப்பட்டது. அதேபோல எம்.எல்.சி கவிதாவும் கைது செய்யப்பட்டுள்ளார், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுடன் நல்ல நட்பில் இருந்தார் என்பதற்காக விசாரணை வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்

டெல்லி மதுபான கொள்கை விவகாரம் மற்றும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான அமலாக்கத்துறை நடவடிக்கை ஆகியவற்றில் 99சதவீதம் உண்மை தன்மை மற்றும் ஆதாரங்கள் கிடையாது. மேலும் இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள புஜ்ஜி பாவுக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது. இவர் கவிதாவின் சி.ஏ.வாக பணியாற்றி வந்தவர்

மேலும் அரவிந்த் கெஜ்ரிவிலுக்கு எதிரான எந்த ஆதாரமும் இல்லை, குற்றம் செய்ததற்கான தெளிவுகளும் இல்லை அவ்வாறான நிலையில் எவ்வாறு இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது எனவே இந்த கைது நடவடிக்கையை சட்ட விரோதம் என அறிவிக்க வேண்டும் என அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அரவிந்த் கெஜ்ரிவால் தரப்பு வாதம் நிறைவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை வரும் வெள்ளிக்கிழமை பிற்பகலுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  அன்றைய தினம் அமலாக்கத்துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags :
Arvind KejriwalDelhi CMdelhi liquor scamSupreme court
Advertisement
Next Article