For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இணையத்தில் வைரலாகும் விம்பிள்டன் வெளியிட்ட டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸின் வீடியோ!

05:20 PM Jul 04, 2024 IST | Web Editor
இணையத்தில் வைரலாகும் விம்பிள்டன் வெளியிட்ட டென்னிஸ் வீரர் கார்லோஸ் அல்கராஸின் வீடியோ
Advertisement

கார்லோஸ் அல்கராஸ் கடந்தமுறை விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் பெற்றதற்க்காக விம்பிள்டன் நிர்வாகம் ஆவேஷம் பட பாடலை எடிட் செய்து பதிவிட்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ரோமஞ்சம் படத்தை இயக்கிய ஜித்து மாதவன் இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் உருவான 'ஆவேஷம்' திரைப்படம் கடந்த ஏப்ரம் மாதம் 11ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.   இப்படத்தில் ரோஷன் ஷானவாஸ், மிதுன் ஜெய், ஷாஜின் கோபு, மன்சூர் அலி கான் உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர்.  மஞ்சும்மல் பாய்ஸ் படத்திற்கு இசையமைத்த சுஷின் ஷ்யாம் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.  படத்தில் பகத் பாசில் முற்றிலும் மாறுபட்ட கேங்க்ஸ்டர் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.

படத்தின் பாடல்கள் அனைத்தும் ஹிட்டாகியது. குறிப்பாக டேப்சி குரலில் இலுமினாட்டி என்ற பாடல் இன்ஸ்டாகிராமில் வைரலாகியது. இத்திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் பகத் பாசில் ரீல் செய்யும் காட்சிகளை மக்கள் இன்ஸ்டாகிராமில் ரீ கிரியேட் செய்து வந்தனர். இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை தாண்டியுள்ளது.

தற்போது விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்று வரும் நிலையில்,  இதில் கடந்தமுறை விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் பெற்ற கார்லோஸ் அல்கராஸுக்காக விம்ப்ள்டன் நிர்வாகம் ஆவேஷம் பட பாடலை எடிட் செய்து, “அல்கராஸ் ரசிகர்களே ஹேப்பி அல்லே” என இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருந்தது. இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.  ரசிகர்கள் இன்றும் அந்த வீடியோவிற்கு கமெண்ட்  செய்து வருகின்றனர்.

https://www.instagram.com/p/C84JGg1Nzvt/

Tags :
Advertisement