For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

#Telangana | ஏரியில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி!

12:42 PM Dec 07, 2024 IST | Web Editor
 telangana   ஏரியில் கார் கவிழ்ந்த விபத்தில் 5 பேர் பலி
Advertisement

தெலங்கானாவில் கார் ஒன்று ஏரியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 பேர் உயிரிழந்தனர்.

Advertisement

தெலங்கானா மாநிலைம், ஹைதராபாத்தைச் சேர்ந்த 6 பேர் இன்று (டிச.7) அதிகாலை ஜலால்பூரில் இருந்து பூதன் போச்சம்பள்ளிக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். யாதாத்ரி புவனகிரி அருகே கார் சென்றுக் கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்பாராத விதமாக அங்குள்ள ஏரி ஒன்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், ஒருவர் படுகாயமடைந்தார்.

இதையும் படியுங்கள் : வசூலை அள்ளி குவிக்கும் #Pushpa2… இரண்டே நாட்களில் இத்தனை கோடி கலெக்‌ஷனா?

விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் பொதுமக்களின் உதவியுடன் உயிரிழந்தவர்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்விற்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். காயமடைந்த மணிகாந்த் (21 வயது) என்பவரை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். உயிரிழந்தவர்கள் வம்சி (23 வயது), திக்னேஷ் (21 வயது), ஹர்ஷா (21 வயது), பாலு (19 வயது), வினய் (21 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளது. விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement