இருசக்கர வாகனம் மீது கார் மோதி விபத்து - 3 பேர் உயிரிழப்பு!
கடலூர் அருகே உள்ள நாகை நத்தம் பகுதியைச் சேர்ந்தவர்கள் கல்பனா மற்றும்
சரண்யா. இவர்களை எம்.புதூர் பகுதியைச் சார்ந்த நேரு என்பவர் முந்திரி
உடைக்கும் பணிக்காக இருசக்கர வாகனத்தில் அழைத்துகச சென்றார். இவர்களின் இருசக்கர வாகனம் ராமாபுரம் அருகே புறவழிச் சாலையில் சென்றுக்கொண்டிருந்தது.
இதையும் படியுங்கள் : கனமழை எதிரொலி | ஜம்மு காஷ்மீரில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை!
அப்போது, எதிர்பாராத விதமாக அடையாளம் தெரியாத கார் ஒன்று இவர்களின் இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளனாது. இதில் சரண்யா மற்றும் கல்பனா சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் சென்ற நேரு படுகாயமடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த நேருவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஆனால், மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே நேரு பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருப்பாதிரிப்புலியூர் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். சாலை விபத்தில 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது