அமெரிக்காவில் கார் விபத்து - 3 இந்தியப் பெண்கள் பலி!
அமெரிக்காவில் நிகழ்ந்த கார் விபத்தில் இந்தியாவைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்தனர்.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ரேக்ஹாபென் படேல், சங்கீதாபென் படேல், மனீஷாபென் படேல். இவர்கள் அனைவரும் குடும்பத்துடன் அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், இவர்கள் மூவரும் நேற்று ஒரே காரில் பயணம் செய்துள்ளனர்.
சாண்டோன் பாலம் அருகே சென்றபோது கட்டுப்பாட்டை இழந்த இவர்களின் கார் சாலை தடுப்பில் மோதி 4 வழிசாலையை கடந்து 20 அடி உயரத்திற்கு பறந்து சாலையின் மறுபுறம் உள்ள மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் காரில் பயணித்த ரேக்ஹாபென், சங்கீதாபென், மனீஷாபென் ஆகிய 3 இந்திய பெண்களும் சம்பவ இடத்திலேயே உடல்நசுங்கி உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவலறிந்து வந்த போலீசார் உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். கார் அதிவேகமாக சென்றனதன் காரணமாக இந்த விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட தகவல் வெளியான நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.