For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

’கேப்டன்’ விஜயகாந்த் மறைவு - கண்ணீர் விட்டு கதறி அழுத துணை நடிகை!

03:32 PM Dec 28, 2023 IST | Web Editor
’கேப்டன்’ விஜயகாந்த் மறைவு   கண்ணீர் விட்டு கதறி அழுத துணை நடிகை
Advertisement

உசிலம்பட்டி தேமுதிக மகளிரணி நிர்வாகியும்,  துணை நடிகையுமான பாண்டியம்மாள் கேப்டன் விஜயகாந்த் படத்தைப் பார்த்து கண்ணீர் விட்டு கதறி அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Advertisement

தேமுதிக நிறுவனரும்,  நடிகருமான கேப்டன் விஜயக்காந்த் உடல்நலக்குறைவு காரணமாக
உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள சூழலில்
பலரும் அவருக்கு நேரில் மரியாதை செலுத்தி வருகின்றனர்.  தமிழ்நாடு முழுவதும்
உள்ள அவரது ஆதரவாளர்கள் மற்றும் தேமுதிக நிர்வாகிகள் அவரது திருஉருவ
படத்திற்கு மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இதன் ஒரு பகுதியாக, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோயில் முன்பு தேமுதிக
உசிலம்பட்டி தொகுதி பொறுப்பாளர் ரவிச்சந்திரன் தலைமையில் உசிலம்பட்டி நகர,
ஒன்றியம் மற்றும் சேடபட்டி,  செல்லம்பட்டி,  எழுமலை பேருர் நிர்வாகிகள்
கேப்டன் விஜயக்காந்த் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை
செலுத்தினர்.

தொடர்ந்து அஞ்சலி செலுத்தும் இடத்திற்கு வந்த உசிலம்பட்டி தேமுதிக மகளிரணி நிர்வாகியும்,  கிடா திரைப்படத்தில் பூ ராமுவிற்கு துணைவியாக நடித்த துணை நடிகை பாண்டியம்மாள் விஜயக்காந்த் திரு உருவ படத்தை பார்த்து கண்ணீர் விட்டு கதறி
அழுத சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags :
Advertisement