‘கேப்டன் மில்லர்’ இசைவெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடத்த திட்டம்!
நடிகர் தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் ‘கேப்டன் மில்லர்’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். இதில் பிரியங்கா அருள் மோகன், நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன், சுமேஷ் மூர் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்கிறார்.இந்த படம் 3 பாகங்களாக உருவாக இருப்பதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் மிக நீண்ட எதிர்பார்ப்பிற்கு மத்தியில் இந்தப்படம் உருவாகி வருகிறது. இந்த படம் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.
சமீபத்தில் ‘கேப்டன் மில்லர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அத்திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சத்தியஜோதி பிலிம்ஸ் நிறுவனத்தின் வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலானது. ‘கேப்டன் மில்லர்’ படத்தின் டீசர், தனுஷின் பிறந்தநாளையொட்டி நள்ளிரவில் வெளியானது. அதுவும் பெரிய அளவில் பேசப்பட்டது.
மேலும், இப்படத்திற்கான தன் டப்பிங் பணிகளை மேற்கொண்டு வருவதாக நடிகை பிரியங்கா மோகன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், இப்படம் வெளியாக இன்னும் ஒரு மாதமே உள்ள நிலையில், இதன் புரோமோஷன் பணிகளை மேற்கொள்ள தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன் பகுதியாக, கேப்டன் மில்லரின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்த முடிவு செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.