Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கேப்டன் மாற்றம் எதிரொலி - சமூக வலைதளங்களில் Followers-ஐ இழக்கும் MI

06:36 AM Dec 16, 2023 IST | Jeni
Advertisement

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டுள்ள நிலையில், அந்த அணியின் எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கங்களில் FOLLOWERS எண்ணிக்கை குறைந்து வருகிறது.

Advertisement

கிரிக்கெட் விளையாட்டில் நாடு கடந்து ரசிகர்களை கொண்டது ஐபிஎல் தொடர்.  ஐபிஎல் போட்டிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதால் ஒவ்வொரு வருடமும் இத்தொடரை கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் எதிர்பார்க்கின்றனர். இந்நிலையில் ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்க ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் ஏலம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். இதனால் வீரர்கள் அணி மாறுவதும், அதிரடி மாற்றங்கள் நிகழ்வதும் வாடிக்கையானது.

அதன்படி இந்த சீசனுக்கான ஏலத்திலும் அதிரடி மாற்றம் நிகழ்ந்துள்ளது. குஜராத் அணியின் கேப்டனாக இருந்த ஹர்திக் பாண்டியா, டிரேடிங் முறையில் மீண்டும் மும்பை அணிக்காக வாங்கப்பட்டார்.

இதையும் படியுங்கள் : மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தேர்வு!

இதையடுத்து, அந்த அணியின் கேப்டன் பொறுப்பை ரோகித் சர்மாவிடம் இருந்து, ஹர்திக் பாண்டியாவிடம் ஒப்படைத்தது மும்பை அணி நிர்வாகம். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, 5 கோப்பைகளை வென்று கொடுத்துள்ளார்.

மும்பை அணியின் இந்த முடிவால், எக்ஸ் மற்றும் இன்ஸ்டாகிராமில் உள்ள அந்த அணியின் அதிகாரப்பூர்வ பக்கங்களில் பின்தொடர்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எக்ஸ் தளத்தில் 8.6 மில்லியனாக (86 லட்சம்) இருந்த எண்ணிக்கை 8.2 மில்லியனாக (82 லட்சம்) குறைந்துள்ளது.

Tags :
#SocialMediacaptainCHANGEFollowershardikpandyainstagrammiMICaptainMumbaiIndiansrohitsharmaX
Advertisement
Next Article