For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த வங்கதேச அணி! கோப்பையுடன் உறங்கும் கேப்டன் #NajmulHossainShanto

06:26 PM Sep 04, 2024 IST | Web Editor
பாகிஸ்தானை வீழ்த்தி சாதனை படைத்த வங்கதேச அணி  கோப்பையுடன் உறங்கும் கேப்டன்  najmulhossainshanto
Advertisement

பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்ற வங்கதேச அணியின் கேப்டன் கோப்பையுடன் உறங்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

Advertisement

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் தொடரில் விளையாடியது. இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் பேட்டிங் மற்றும் பவுலிங் இரண்டிலும் அபாரமாக செயல்பட்ட வங்கதேச அணி, பாகிஸ்தான் அணியை 10 விக்கெட்டுகள் மற்றும் 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை ஒயிட்வாஷ் செய்து வென்றது.

இதற்கு முந்தைய 12 சந்திப்பில் ஒருமுறை கூட பாகிஸ்தானை தோற்கடிக்காத வங்கதேச அணி, அவர்களின் சொந்த மண்ணிலேயே வைத்து வீழ்த்தி முதல் டெஸ்ட் தொடரை வென்று வரலாறு படைத்தது. இந்த வெற்றியின் மூலம் வங்கதேசம் டெஸ்ட் சாம்பியன்ஷிப் தவரிசையில் 45.83 சதவிகித வெற்றிகளுடன் 4-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இதையும் படியுங்கள் : #coolie திரைப்படத்தின் புதிய போஸ்டர் | அது என்ன 1421 – எகிறும் எதிர்பார்ப்பு!

இந்த வெற்றி வங்கதேச கிரிக்கெட் வரலாற்றில் போற்றும் விதமாக பார்க்கப்படும் நிலையில், வங்கதேச கிரிக்கெட் அணியின் கேப்டன் நஜ்முல் ஹொசைன் சாண்டோ பாகிஸ்தானுக்கு எதிரான மறக்கமுடியாத டெஸ்ட் தொடரை வென்ற பிறகு கோப்பையுடன் தூங்கும் படத்தை பகிர்ந்துள்ளார். இதற்கிடையே, அவர் கோப்பையுடன் ‘குட் மார்னிங்’ என முகநூலில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement