For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

வெளியானது 'கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட திரைப்படத்தின் டிரெய்லர்!

10:10 PM Jul 12, 2024 IST | Web Editor
வெளியானது  கேப்டன் அமெரிக்கா  பிரேவ் நியூ வேர்ல்ட திரைப்படத்தின் டிரெய்லர்
Advertisement

கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்படத்தின டிரெய்லர் வெளியாகியுள்ளது.

Advertisement

2008ம் ஆண்டு 'அயர்ன் மேன்' திரைப்படத்துடன் மார்வல் சூப்பர் ஹீரோக்களின் மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸ் (எம்சியு) என்று சொல்லப்படும் திரைப்பட வரிசை ஆரம்பமானது. தொடர்ந்து 'ஹல்க்', 'தோர்', 'கேப்டன் அமெரிக்கா' என அடுத்தடுத்து சூப்பர் ஹீரோ படங்களை வெளியாகி வரவேற்பை பெற்றன. இதில் 'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' திரைப்படத்துடன் எம்சியு நான்காம் கட்டம் நிறைவடைந்தது.

இதில் முக்கிய கதாபாத்திரங்களான அயர்ன்மேன், ப்ளாக் விடோ இறந்து போனதால், அதில் நடித்திருந்த ராபர்ட் டவுனி ஜூனியர், ஸ்கார்லெட் ஜோஹன்ஸன் ஆகியோர் மார்வெல் திரைப்படங்களிலிருந்து ஓய்வு பெற்றனர். அதேபோல கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரமும் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால், அதில் நடித்த கிறிஸ் எவான்ஸ் மார்வெல் திரைப்படங்களிலிருந்து விலகினார்.  இந்த நிலையில், கேப்டன் அமெரிக்கா: பிரேவ் நியூ வேர்ல்ட் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது.  

இந்த திரைப்படம் மார்வல் சினிமாட்டிக் யுனிவர்ஸில் தோன்றும் பால்கன் என்ற கதாபாத்திரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படத்தில் அந்தோணி மேக்கி கதாநாயகனாக நடித்துள்ளார்.  இப்படத்தை ஜூலியஸ் ஓனா இயக்கியுள்ளார்.  இத்திரைப்படத்தை  மார்வெல் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.  

Tags :
Advertisement