For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

ஹிந்தியில் பேச சொன்னவர்களுக்கு நடிகை மீனாவின் க்யூட் பதில்... வைரலாகும் வீடியோ!

05:55 PM Oct 01, 2024 IST | Web Editor
ஹிந்தியில் பேச சொன்னவர்களுக்கு நடிகை மீனாவின் க்யூட் பதில்    வைரலாகும் வீடியோ
Advertisement

ஹிந்தியில் பேச சொன்னவர்களுக்கு நடிகை மீனா கொடுத்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

அபுதாபியின் யாஸ் தீவில் உள்ள எதிஹாட் அரங்கில், சர்வதேச இந்திய திரைப்பட அகாடமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது. செப்.27 முதல் 29 வரை மூன்று நாட்கள் இந்த விழா நடைபெற்றது. சிறந்த நடிகர், சிறந்த திரைப்படம் என பலப் பிரிவுகளுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இந்நிலையில் இந்த விழாவில் நடிகை மீனா பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகை மீனாவிடம் ஹிந்தியில் பேசும்படி செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு நடிகை மீனா,“இது ஹிந்தி விழாவா? பிறகு ஏன் என்னை அழைத்தீர்கள்? நான் இது தென்னிந்திய விழா என நினைத்தேன். தென்னிந்திய படங்களும் தென்னிந்திய நடிகர்களும் சிறப்பானவர்கள். நான் ஒரு தென்னிந்தியர் என்பதில் பெருமை கொள்கிறேன். ஐஃபா உற்சவம் தென்னிந்தியா மட்டுமின்றி வட இந்தியாவையும் ஒன்றிணைத்து பெரிய நிகழ்வாக நடத்துகிறது” என்று பேசினார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Tags :
Advertisement