For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

“நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்றது” - உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்!

06:02 PM Jul 05, 2024 IST | Web Editor
“நீட் தேர்வை ரத்து செய்வது தேவையற்றது”   உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாணப் பத்திரம் தாக்கல்
Advertisement

மே 5-ம் தேதி நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

Advertisement

மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்யக்கோரியும், நீட் வினாத்தாள் கசிவு, முறைகேடுகள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த மனுக்கள் மனுக்கள் மீதான விசாரணை வரும் ஜூலை 8-ம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில், உச்சநீதிமன்றத்தில் இன்று (ஜூலை 5) மத்திய அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளது.

அந்த பிராமணப் பாத்திரத்தில், “மே 5-ம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்வது என்பது இயலாத ஒன்று. அப்படி அந்த நீட் தேர்வை ரத்து செய்வது என்பது நியாயமானதாகவும் இருக்காது. நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்து விட்டு மறுதேர்வு நடத்த தேவையில்லை. ரகசியத் தன்மையை மீறும் வகையில் பெரிய அளவிலான முறைகேடுகள் நடந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லாததால் நீட் தேர்வை ரத்து செய்ய தேவையில்லை" என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Tags :
Advertisement