For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

தேர்தல் பத்திர முறைகள் ரத்து - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

11:38 AM Feb 15, 2024 IST | Web Editor
தேர்தல் பத்திர முறைகள் ரத்து   உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Advertisement

தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்து உச்சநீதிமன்றம் அதிரடியாக தீர்ப்பு வழங்கியுள்ளது.

Advertisement

அரசியல் கட்சிகள் ரூ.20 ஆயிரத்திற்கு மேல் ஒரு நபரிடம் நிதி பெற்றால்,  தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க அரசியல் சட்டம் வழிவகை செய்தது.  இந்த சட்டத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு திருத்தம் கொண்டு வரப்பட்டு,  தேர்தல் பத்திர திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது.

இதன் மூலம் தனிநபர் அல்லது கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்களது விருப்பமான கட்சிகளுக்கு ரூ.1000 முதல் ரூ 1 கோடி வரை தேர்தல் பத்திரங்கள் மூலமாக நிதி வழங்கலாம்.  தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெற்றால் தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க தேவையில்லை.

இந்த தேர்தல் பத்திரங்களை எஸ்.பி.ஐ வங்கி வெளியிடும்.  இந்திய குடியுரிமை பெற்ற யார் வேண்டுமானாலும் தேர்தல் பத்திரங்களை வாங்கி, ரூ.1000 முதல் ரூ. 1கோடி வரை அரசியல் கட்சிகளுக்கு நிதி அனுப்பலாம்.  தேர்தல் பத்திரம் திட்டத்தில் வெளிப்படத்தன்மை இல்லை என்று கூறி,  ஜனநாயக சீர்திருத்த சங்கம்,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி,  காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஜெயா தாக்கூர் உள்ளிட்டோர் இந்த திட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கில் மனுதாரர்கள் தரப்பில்,  மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல்,  பிரஷாந்த் பூஷண் உள்ளிட்டோர் ஆஜராகி,  தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு வரம்பற்ற முறையில் நன்கொடை கிடைக்கிறது.  இந்த திட்டத்தின் மூலம் குடிமக்களின் தகவல் அறியும் உரிமை மறுக்கப்பட்டு,  அரசியல் கட்சிகள் ஊழல் செய்ய வழிவகுக்கிறது என்ற வாதத்தை முன்வைத்தனர்.

இந்த நிலையில்,  தேர்தல் பத்திரம் முறை என்பது அரசியலமைப்புக்கு எதிரானது என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது.

அரசிடம் கணக்கு,  கேள்வி கேட்கும் உரிமை நாட்டு மக்களுக்கு உள்ளது என பல தீர்ப்புகள் மூலம் நீதிமன்றங்கள் கூறியுள்ளது.  தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் முக்கிய அம்சமே அதுதான் இவ்வாறான விவகாரங்களுக்கும் தேவைப்படுகிறது.  குறிப்பாக இந்த நீதிமன்றம் சமூக,  கலாச்சார,  அரசியல் மற்றும் பொருளாதார பிரச்சினைகள் பற்றிய தகவல் அறியும் உரிமையை அங்கீகரித்துள்ளது.  தகவல்கள் வெளிப்படையாக தெரிவிக்கப்படாத தேர்தல் பத்திரங்கள் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவு 19 உட்பிரிவு 1 உட்பிரிவு ஏவை மீறும் வகையில் உள்ளது உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மார்ச் 6 ஆம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் மூலம் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும் SBI தேர்தல் ஆணையத்துக கு வழங்க வேண்டும்.  மார்ச் 13ம் தேதிக்குள்.  அனைத்து விவரங்களும் இணையத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.  கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற பங்களிப்புகளை வழங்க அனுமதிப்பது தன்னிச்சையானது.

தேர்தல் பத்திரம் சட்டம் மட்டும் அல்ல,  தேர்தல் பத்திரங்களை வழங்க கார்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதிக்கும் வகையில் செய்யப்பட்ட கம்பெனி சட்டதிருத்த மசோதாவும் ரத்து செய்யப்படுகிறது.  அதேபோல தேர்தல் பத்திரம் மூலம் திரட்டப்பட்ட நிதியை நிதி அளித்தவர்களே திரும்ப செலுத்த அரசியல் கட்சிகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Tags :
Advertisement