Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

கனடாவுக்கு மீண்டும் இ-விசா சேவை - வெளியுறவு அமைச்சகம் தகவல்!

03:39 PM Nov 22, 2023 IST | Web Editor
Advertisement

கனடா நாட்டு மக்களுக்கு மீண்டும் இ-விசா சேவையைத் தொடங்கியுள்ளதாக வெளியுறவு அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.

Advertisement

காலிஸ்தான் பிரிவினைவாத அமைப்பைச் சேர்ந்த ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை விவகாரத்தில் இந்தியா-கனடா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. நிஜ்ஜார் கடந்த ஜூன் 18-ஆம் தேதி கனடாவில் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

நிஜ்ஜார் கொலையில் இந்திய உளவு அமைப்புக்கு தொடர்பு உள்ளது என்று கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அந்நாட்டு நாடாளுமன்றத்தில் குற்றம் சாட்டினார்.  அதனை தொடர்ந்து, அந்நாட்டில் உள்ள இந்திய தூதரக மூத்த அதிகாரி நாட்டை விட்டு வெளியேறுமாறும் கனடா உத்தரவிட்டது.

இதையும் படியுங்கள்:கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆலோசகராக கம்பீர் நியமனம்!

இதற்கு பதிலடியாக,  இந்தியாவிலுள்ள கனடா தூதரக உயர் அதிகாரியை இந்தியா வெளியேற்றியது. மேலும், கனடாவின் குற்றச்சாட்டுக்கு கடும் கண்டனம் தெரிவித்த இந்தியா, ட்ரூடோவின் குற்றச்சாட்டையும் மறுத்தது.

இந்த குற்றச்சாட்டுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்,  கனடாவிலிருந்து இந்தியா வருபவர்களுக்கான அனைத்து வகை நுழைவு இசைவு  வழங்குவதை இந்தியா தற்காலிகமாக நிறுத்தியது. அதோடு, இந்தியாவிலுள்ள கனடா தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கையை குறைக்குமாறு கனடாவை இந்தியா கேட்டுக்கொண்டது.

இந்த சூழலில், கனடாவில் குறிப்பிட்ட விசா சேவையை கடந்த மாத இறுதியில் இந்தியா மீண்டும் தொடங்கியது. இதன் தொடர்ச்சியாக நவம்பர் 22 ஆம் தேதி முதல் கனடா நாட்டினருக்கு இ-விசா சேவை தொடங்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பரில் இ-விசா சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags :
Canadiane-Visa serviceIndiainformsMinistry Of External Affairsstarts
Advertisement
Next Article