For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

இப்படிலாம் நடக்குமா? - திடீரென ஆரஞ்சு நிறமான ஏதன்ஸ் நகரம்!

09:31 AM Apr 25, 2024 IST | Web Editor
இப்படிலாம் நடக்குமா    திடீரென ஆரஞ்சு நிறமான ஏதன்ஸ் நகரம்
Advertisement

ஐரோப்பா நாடுகளில் ஒன்றான கிரீஸின் தலைநகரம் ஏதன்ஸ் நகரம் திடீரென ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Advertisement

ஒருநாள் ரொம்ப களைப்பா இரவு தூங்க போறீங்க.. தூங்கி எழுந்து கண்ணை கசக்கிட்டு ஜன்னலை திறந்து பார்த்தா அப்படியே எல்லாமே ஆரஞ்சு நிறத்துல தெரிஞ்சா எப்படி இருக்கும்.., வானம் ஆரஞ்சு.. பூமி.. ஆரஞ்சு .. மரம் ஆரஞ்சுன்னு இருந்தா உங்களுக்கு முதல்ல என்ன தோணும்.. உங்க கண்ணுக்கு ஏதோ பிரச்னைன்னு தானே நினைப்பீங்க.. அதான் இல்லை.. அதற்கு வேறு ஒரு காரணமும் இருக்கு வாங்க பார்க்கலாம்..

 இப்படித்தாங்க ஐரோப்பா நாடான கிரீஸின் தலைநகரான ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.  ஏதன்ஸ் நகரம் ஆரஞ்சு நிறமாக மாறக் காரணம் என்னன்னு விரிவாக தெரிஞ்சுக்கலாம்.

ஐரோப்பா கண்டத்தின் முக்கிய நாடுகளில் ஒன்றானது கிரீஸ் தலைநகரம் ஏதென்ஸ். இந்த நகரம் பல்வேறு சிறப்புகளுக்கு பெயர்போனது. மேலும் உலகின் மிகவும் தொன்மையான நகரங்களில் ஒன்றாகவும் ஏதன்ஸ் கருதப்படுகிறது.

சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கிரேக்க சாம்ராஜ்ஜியத்தின் மையப்புள்ளியாக ஏதென்ஸ் விளங்கும் அதேவேளையில் நவீன ஒலிம்பிக் போட்டிகளின் தாயகமாக ஏதன்ஸ் திகழ்கிறது. இந்த நாட்டில் பல்வேறு சிறப்புவாய்ந்த நினைவு சின்னங்களும், புராதன கட்டிடங்களும் உள்ளன. பண்டைய காலம் முதலே வெளிநாட்டினரும் சுற்றுலா பயணிகளும் விரும்பி செல்லும் நகரமாக ஏதென்ஸ் விளங்குகிறது.

இந்தநிலையில் ஏதென்ஸ் நகரம் நேற்று திடீரென ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.  புராதன ஒலிம்பிக் மைதானம் அமைந்துள்ள சின்டக்மா சதுக்கம், பார்த்தியான் ஆலயம், லிகாப்பட்டஸ் குன்றுகளை உள்ளடக்கிய பழைய அகோரா ,  புதிய அகோரா உள்பட ஏதென்ஸ் நகரமே ஆரஞ்சு நிறமாக மாறி காட்சியளித்தது.

இதனால் சுற்றுலா வந்த வெளிநாட்டினர் மட்டுமின்றி உள்ளூர்வாசிகளும் பீதியடைந்தனர். டூர்கோவூனியா மலை, புனித குன்றுகளை கொண்ட அக்ரோபோலிஸ் ஆகியவையும் செவ்வாய் கிரகத்தை பிரதிபலிப்பதுபோல காட்சியளித்தன. இந்தநிலையில் ஏதென்ஸ் நகரின் இந்த மாற்றத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா விளக்கம் கொடுத்துள்ளது.

அதாவது, வட ஆப்பிரிக்காவில் இருந்து கிரீஸ், சிப்ரஸ், மாசிடோனியோ உள்ளிட்ட நாடுகளுக்கு இந்தகாலத்தில் மேக கூட்டங்கள் நகருவது வாடிக்கைதான். இந்தநிலையில் அசாதாரணமாக இந்த மேக கூட்டத்துடன் சாகாரா பாலைவனத்தின் மண்துகள்கள் கலந்தது புழுதிப் புயல் வீசியதால் கிரீஸ் நகரம் ஆரஞ்சு நிறமாக மாறியுள்ளதாக புழுதி புயல் தாக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை மேலும்  2 நாட்களுக்கு  நீடிக்கும் என கிரீஸ் நாட்டின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இந்தநிலையில் ஆரஞ்சு நிறமாக மாறிய ஏதென்ஸ் நகரின் படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகின்றன.

Tags :
Advertisement