ஸ்ட்ராபெர்ரியில் புழு இருக்குமா? இணையத்தில் வைரலாகும் வீடியோ!
ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மேல் தோளில் சிறிய அளவிலான பூழுக்கள் இருக்கும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஸ்ட்ராபெர்ரி பழம் சுவையில் மட்டுமல்லாமல் தோற்றத்திலும் அனைவரின் கவனத்தை ஈர்க்க கூடியவை. ஸ்டாபெரி பழத்தின் கண்ணை கவரும் சிவப்பு நிறத்தாலும் பெரும்பாலான குழந்தைகளின் கவனத்தை ஈர்க்கிறது. பொதுவாக வெப்பம் குறைவாக இருக்க கூடிய இடத்தில் தான் இந்த பழம் வளர கூடியவை. ஸ்ட்ராபெர்ரி பழத்தை ஜாம், கேக், ஐஸ்கீரிம் போன்ற இனிப்பு பொருட்களில் சேர்த்து சப்பிடத்தான் அதிகளவிலானோர் விரும்புவர்.
இதையும் படியுங்கள் : 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இந்தியாவின் உற்பத்தித் குறியீடு 59.1 PMI உயர்வு!
இந்நிலையில், @FredDiBiase247 என்ற X தளத்தில் கணக்கு வைத்திருக்கும் பயனர் ஒருவர் ஸ்ட்ராபெர்ரி பழத்தை வைத்து ஒரு ஆய்வு நடத்தினார். இதில் அந்த நபர் ஸ்ட்ராபெர்ரி பழத்தை நுண்ணோக்கியில் வைத்து அதனை ஆய்வு செய்தார். அப்போது பழத்தின் மேல் உள்ள தோளில் அதிகளவிலான சிறிய சிறிய பூழுக்கள் இருந்ததை கண்டுள்ளார். இதையடுத்து, அந்த நபர் நடத்திய ஆய்வை வீடியோ பதிவாக எடுத்து, அதனை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
ஸ்ட்ராபெர்ரி பழத்தின் மேல் தோளில் அதிகளவிலான சிறிய சிறிய பூச்சிகள் இருந்ததையும், அதனை அந்த நபர் சுத்தம் செய்வதையும் அந்த வீடியோவில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளத்தில் அனைவரால் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. மேலும், இந்த வீடியோ பதிவை பார்க்கும் அனைவரும் தங்களின் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.