Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

வெளிமாநில மக்கள் வேலை செய்யலாம், ஒட்டு போட கூடாதா ? தமிழிசை சௌந்தரராஜன்!

தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம் விரிவாக்கம் செய்ததால் முதலீடு வருகிறது என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
11:44 AM Aug 04, 2025 IST | Web Editor
தூத்துக்குடியில் விமான நிலையம், துறைமுகம் விரிவாக்கம் செய்ததால் முதலீடு வருகிறது என்று தமிழிசை சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.
Advertisement

சென்னை விமான நிலையத்தில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, "அதிமுக - பாஜக தலைவர்கள் இடையே நல்ல சந்திப்பு. மேடைகளில் மட்டுமில்லாமல் விருந்துகள் முலமாகவும் சந்தித்து கொள்ளலாம். நல்ல விருந்து பாரம்பரிய, சிறு தானிய, வெளி நாட்டு உணவு வகைகள் இருந்தன.

Advertisement

நாங்கள் மகிழ்ச்சியாக உண்டு ஆரோக்கியமாக இருக்கிறோம். கூட்டணி விருந்ததை பார்த்து சிலருக்கு அஜீரணம் வந்து விட்டது. திமுக காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகளால் ஜீரணிக்க முடியவில்லை. அதிமுக - பாஜக கூட்டணி குறித்து என்ன வேண்டுமானாலும் பேசி கொள்ளட்டும், எங்களுக்கு கவலை இல்லை. நல்ல ஆரோக்கியமான சந்திப்பு. முதலமைச்சர் தூத்துக்குடி சென்று உள்ளார்.

தூத்துக்குடியில் உதிரி பாகங்கள் தயாரிக்க காரணம் விமான நிலையம், துறைமுகம் ஆகியவை விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த விரிவாக்கம் செய்யப்பட்டதால் வெளி நாட்டு நிறுவனங்களுக்கும் மற்ற நிறுவனங்களுக்கும் நம்பிக்கை வந்துள்ளது. இதனால் முதலீடு எப்படி வருகிறது என்றால் இந்திய பொருளாதாரம் மேம்பட்டு இருக்கிறது. இதனால் தமிழ்நாட்டிற்கு முதலீடு வருகிறது.

ஸ்டெர்லைட் மூடப்பட்டுள்ளது. அதில் வேலை இழந்த தூத்துக்குடி மக்களுக்கு தற்போது உள்ள தொழிற்சாலைகளில் முன்னுரிமை அளிக்க வேண்டும். 6.5 லட்சம் பீகார் வாக்காளர்கள் தமிழகத்திற்கு வந்து விடுவார்கள் என்று பொய்யான தகவலை சிதம்பரம் சொல்கிறார். தேர்தல் ஆணையம் கண்டனம் தெரிவித்து
உள்ளது. வேறு நாட்டில் இருந்து வந்து ஒட்டு போடலாம். வெளிமாநில தொழிலாளர்களிடம் வேலை வாங்குவீர்கள்.

பிரியங்கா காந்தி எப்படி வய நாட்டில் வந்து நின்றார். அப்போது அங்கிருந்து வந்தவர்கள் ஒட்டு போட முடியாதா என்ன? எல்லாவற்றிக்கும் பயம். 2026ம் ஆண்டு தேர்தலில் திமுக, இந்தியா கூட்டணி தோற்க போகிறது என்பது சிதம்பரத்திற்கு நன்கு தெரியும். இப்போ கதை சொல்ல ஆரம்பித்து விட்டனர். தேர்தல் ஆணையம் சரியான விளக்கத்தை தந்து விட்டது.

தமிழ்நாட்டில் மோசமான ஆட்சி நடந்து வருகிறது. எல்லா விததிலும் தமிழக அரசு தோல்வி அடைந்து வருகிறது. கார்ப்ரேட் போல் அறநிலை துறை செயலாற்றுகிறது. எந்த பணியும் நிறைவு செய்யாமல் குடமுழுக்கு நடத்துகின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக கமல்ஹாசன் நன்றியை தேடி தேடி திமுகவிற்கு தெரிவிக்கிறார். பெண்கள் எங்கு இருந்தாலும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

Tags :
ADMKAirportbihaarBJPChennaiCMMKStalintamilisai soundararajan
Advertisement
Next Article