For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

”அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்கவே ஓய்வு நாளில் பிரச்சாரம்” - தவெக தலைவர் விஜய் பேச்சு!

அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்கவே பிரச்சாரத்திற்கு ஓய்வு நாளை தேர்ந்தெடுத்தோம் என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
03:47 PM Sep 20, 2025 IST | Web Editor
அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்கவே பிரச்சாரத்திற்கு ஓய்வு நாளை தேர்ந்தெடுத்தோம் என தவெக தலைவர் விஜய் பேசியுள்ளார்.
”அரசியலில் சிலருக்கு ஓய்வு கொடுக்கவே ஓய்வு நாளில் பிரச்சாரம்”   தவெக தலைவர் விஜய் பேச்சு
Advertisement

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தமிழ் நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அந்த வகையில் இன்று அவர் நாகப்பட்டினம் மாவட்டத்தில் பிரச்சாரம் மேற்கொண்டார்.

Advertisement

அப்போது பேசிய அவர்,

”நாகப்பட்டினத்தில் மண்வளத்தை பாதிக்கும் இறால் பண்ணைகளை முறைப்படுத்த வேண்டும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரமும் விவசாயிகளின் வாழ்க்கையும் பாதிக்காமல் இருக்கும்.

வேளாங்கண்ணி நாகூர் கோடியக்கரை என இங்கு உள்ள சுற்றுலா தலங்கள் எல்லாம் கொஞ்சம் மேம்படுத்தலாம் அதை செய்தீர்களா? வேதாரண்யம் பகுதியில் உப்பு ஏற்றுமதிக்கான வசதிகள் செய்து கொடுக்கலாம் செய்தார்களா? நாகூர் ஆண்டவர் அரசு மருத்துவமனையில் பிரசவம் பார்க்கும் மருத்துவர்கள் இல்லையாம், தெரியுமா? நாகப்பட்டினம் புது பேருந்து நிலையத்தை யாவது சுத்தமாகவும் சுகாதாரமாகவும் வைத்து உள்ளார்களா? நாகப்பட்டினம் ரயில்வே வேலையை துரிதமாக முடிக்கலாம் செய்தார்களா? இங்கு ஏற்கனவே இருந்த ஸ்டீல் ரோலிங் மில், ரயில் பெட்டி தொழிற்சாலைகள் மூடியதை மீண்டும் திறந்தால் வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கும் ஏன் அதைப்பற்றி சிந்திக்கவில்லை? மேலக்கோட்டை வாசல் மேம்பாலம் கட்டி 50 வருடங்கள் ஆகிறது அதனை முறையாக மேம்படுத்தலாம், செஞ்சாங்களா? தஞ்சாவூர் - நாகப்பட்டினம் நெடுஞ்சாலை வேலை பல ஆண்டுகளாக நடைபெறுகிறது அதனை வேகமாக செய்யலாம் செய்தார்களா? நெல் மூட்டைகள் மழை காலங்களில் நனைந்து விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள் அதற்கு ஒரு குடோன் கட்டி தந்தார்களா? தேர்தலுக்கு முன்பு இதையெல்லாம் செய்வோம் என்று சொன்னாங்களே செஞ்சாங்களா? இவை எதையுமே செய்யாமல் செய்ததாக பெருமையாக சொல்கிறார் முதல்வர்.

மக்களை சந்திக்கும் பயணத்திட்டம் போடும்போது அது என்ன சனிக்கிழமை பயணம் என்ற விமர்சனம் வந்தது உங்களை சந்திக்க வரும்போது உங்களுக்கு எந்த தொந்தரவும் இருக்கக் கூடாது என்ற ஒரே காரணத்தினால் தான் வார இறுதி நாளா பார்த்து மக்கள் பயணத்தை திட்டமிட்டுள்ளோம். அரசியலில் சில பேருக்கு ஓய்வு கொடுக்க வேண்டும் அல்லவா அதனால் தான் ஓய்வு நாளாக பார்த்து தேர்ந்தெடுத்தோம்.

என் மக்களை என் சொந்தங்களை சந்திப்பதில் எத்தனை கட்டுப்பாடுகள்.
அதைப் பேசக்கூடாது இதைப் பேசக்கூடாது என பல்வேறு காரணங்கள் அரியலூர் செல்வதற்கு முன்பாகவே மின்தடை, திருச்சியில் பேச செல்லும்போது ஸ்பீக்கருக்கு செல்லும் வயர் கட்டு. பிரதமரோ, உள்துறை அமைச்சரோ ஆர் எஸ் எஸ் தலைவரோ இங்கு வந்தால் இது போன்ற கண்டிஷனும், பவர் கட், ஒயர் கட், போன்றவற்றை செய்வீர்களா.நேரடியாக கேட்கிறேன் என்னை மிரட்டி பார்க்கிறீர்களா?

மக்கள்  நிம்மதியாக வந்து பார்த்து செல்வதற்கு அமைதியான ஒரு இடம்.அதை நாங்கள் தேர்வு செய்து அதற்கு நாங்கள் அனுமதி கேட்கிறோம். ஆனால் அந்த இடத்தை விட்டுவிட்டு மக்கள் எங்கு நெருக்கடியோடு நிற்பார்களோ அந்த இடமாக பார்த்து நீங்கள் தேர்வு செய்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள். நான் மக்களை சந்திக்கக் கூடாது அவர்களுடன் பேசக்கூடாது, அவர்களுடைய குறைகளை கேட்கக்கூடாது. அவர்களுக்காக குரல் கொடுக்கக் கூடாது. என்ன தான் உங்கள் எண்ணம்.  ஒரு சாதாரண ஒரு தமிழ்நாட்டு மண்ணோட ஒரு மகனாக தமிழ் மக்களுடைய சொந்தக்காரனாக, நான் பார்க்க போனால் என்ன பண்ணுவீர்கள். அப்போதும் தடை போடுவீர்களா. 2026ல் இரண்டு பேருக்கு தான் இங்கு போட்டியே ஒன்று தவெக மற்றொன்று திமுக” என்று பேசினார்.

Tags :
Advertisement