தேசிய ஜனநாயக கூட்டணியின் துணை ஜனாதிபதி வேட்பாளராக சி.பி. ராதாகிருஷ்ணன் அறிவிப்பு!
நாட்டின் துணை ஜனாதிபதியும் இருந்த ஜெகதீப் தன்கர் உடல் நிலையை காரணம் காட்டி கடந்த ஜூலை 21 அன்று திடீரென பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதவிக்காலம் 2027 ஆகஸ்ட் மாதம் வரை உள்ளது.இதனை தொடர்ந்து இந்திய தேர்தல் ஆணையமானது துணை ஜனாதிபதி பதவி தேர்தலுக்கான பணிகளை தொடங்கியது.
மேலும்தேர்தல் அட்டவணையையும் கடந்த 7-ந்தேதி வெளியிட்டது. அதன்படி புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய செப்டம்பர் 9-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 7-ந்தேதி தொடங்கியது. வருகிற 21-ந்தேதி மனுதாக்கல் செய்ய கடைசி நாளாகும்.
இந்தியா கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து எந்த தகவல்களும் வெளியாகவில்லை.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து முடிவு எடுக்கும் அதிகாரத்தை பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் இன்று பாஜக நாடாளுமன்ற குழு கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டா மற்றும் பிரதமர் மோடி, மூத்த பா.ஜ தலைவர்கள் உள்ளிட்டோர் துணை ஜனாதிபதி வேட்பாளர் குறித்து ஆலோசனை நடத்தினர்.
இந்த கூட்டத்தின் ஆலோசனைக்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்திந்த பாஜக தலைவர் ஜே.பி. நட்டா. அப்போது அவர், தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் துணை ஜனாதிபதி வேட்பாளராக தமிழகத்தை சேர்ந்த C. P. ராதாகிருஷ்ணன் அறிவித்தார்.. C. P. ராதாகிருஷ்ணன் தற்போது மகாராஷ்டிர மாநில ஆளுநராக இருப்பது குறிப்பிடத்தக்கது.