Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்!

பன்முக ஆளுமையாகத் தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்கும் சி.பா.ஆதித்தனாருக்கு என் புகழ் வணக்கங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
12:08 PM Sep 27, 2025 IST | Web Editor
பன்முக ஆளுமையாகத் தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்கும் சி.பா.ஆதித்தனாருக்கு என் புகழ் வணக்கங்கள் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Advertisement

சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாள் 2019-ம் ஆண்டு முதல் அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சி.பா.ஆதித்தனாரின் 121-வது பிறந்தநாள் இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Advertisement

சென்னை எழும்பூரில் உள்ள சி.பா.ஆதித்தனாரின் சிலைக்கு தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், பி.கே.சேகர்பாபு, மு.பெ.சாமிநாதன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோ தங்கராஜ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், "தமிழ் இதழியலின் முன்னோடியாகப் பாமரருக்கும் எளிய மொழிநடையில் உலக நடப்புகளைக் கொண்டு சென்ற சி.பா.ஆதித்தனாரின் பிறந்தநாளில், பன்முக ஆளுமையாகத் தமிழ் வரலாற்றில் உயர்ந்து நிற்கும் அவருக்கு என் புகழ் வணக்கங்கள்"! இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
121st birthdayAdithanarCHIEF MINISTERgovernmentM.K.StalinTamilNadutribute
Advertisement
Next Article