சங்கரன்கோவில் அருகே நாய்கள் கடித்து 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழப்பு!
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில், தென்றல் நகர் பகுதியைச் சேர்ந்த லியாகத் அலி என்பவர் பண்ணை வைத்து ஆடுகளை வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். இந்த நிலையில் லியாகத் அலி வழக்கம்போல இன்று காலை ஆட்டுப்பண்ணைக்குச் சென்ற போது ஆடுகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அதிகாலையில் ஆட்டுப்பண்ணைக்குள் புகுந்த நாய்கள் ஆடுகளை கடித்து குதறியது தெரியவந்தது. இதில் 30க்கும் மேற்பட்ட ஆடுகள் உயிரிழந்துள்ளது.
அப்பகுதியில் நாய்கள் தொந்தரவு அதிகம் இருப்பதாகவும் ஆடுகளுக்கு பதிலாக குழந்தைகள் மற்றும் பெரியவர்கள், பொதுமக்கள் நடமாடும் பகுதிகளில் நாய் கடி சம்பவம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளதாக லியாகத் அலி தெரிவித்துள்ளார். இதையடுத்து நகராட்சி நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் இழந்த ஆடுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.