Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Byelection | 5.50லட்சம் வாக்குகள் பெற்று வயநாட்டை தன்வசமாக்கிய பிரியங்கா காந்தி!

01:13 PM Nov 23, 2024 IST | Web Editor
Advertisement

வயநாடு இடைத் தேர்தலில் போட்டியிட்ட பிரியங்கா காந்தி 5.50லட்சம் வாக்குகளை பெற்று முன்னிலையில் உள்ளார்.

Advertisement

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தி மக்களவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய இரண்டு தொகுதிகளில் ராகுல் காந்தி போட்டியிட்ட நிலையில் இரண்டிலுமே வெற்றி பெற்றார். இதனால், வயநாடு தொகுதி எம்பி பதவியை ராகுல் காந்தி ராஜிநாமா செய்தார்.இதையடுத்து, அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு தேர்தல் நடத்தப்பட்டது.

இதில் காங்கிரஸ் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் சத்யன் மோக்கேரி, பாஜக சார்பில் நவ்யா ஹரிதாஸ் உள்ளிட்ட வேட்பாளர்கள் போட்டியிட்டனர். நவம்பர் 13ம் தேதி நடைபெற்ற தேர்தலில்  62.39% வாக்குகள் பதிவாகியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வயநாடு இடைத் தேர்தலுக்கான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் எண்ணப்பட உள்ளன. முதல் முறையாக தேர்தலில் போட்டியிடும் பிரியங்கா வெற்றி பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வாக்கு எண்ணிக்கை எண்ணப்பட்டு வரும் நிலையில் காலை முதலே தொடர்ந்து பிரியங்கா காந்தி முன்னிலை வகித்து வருகிறார். பகல் 1மணி நிலவரப்படி பிரியங்கா காந்தி 5.50 லட்சம் வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.

Tags :
Election. wayanad electionpriyanka gandhiWayanad
Advertisement
Next Article