For the best experience, open
https://m.news7tamil.live
on your mobile browser.
Advertisement

சென்னை - பெங்களூர் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு - உடனடியாக தரையிறக்கம்!

11:41 AM Dec 26, 2024 IST | Web Editor
சென்னை   பெங்களூர் விமானத்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு   உடனடியாக தரையிறக்கம்
Advertisement

சென்னையில் இருந்து பெங்களூரு புறப்பட்டு சென்ற இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் நடு வானில் இயந்திரக் கோளாறு ஏற்பட்டது.

Advertisement

சென்னையில் இருந்து பெங்களூர் செல்லும் இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் இன்று (டிச. 26) காலை 8.40 மணிக்கு சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இருந்து 107 பயணிகள், 6 விமான ஊழியர்கள் என மொத்தம் 113 பேருடன் புறப்பட்டு வானில் பறக்கத் தொடங்கியது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திர கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி கண்டுபிடித்தார்.

இதனையடுத்து விமானம் தொடர்ந்து பறப்பது ஆபத்தானது என உணர்ந்த விமானி உடனடியாக சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு அவசரமாக தகவல் தெரிவித்தார். தொடர்ந்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகள், விமானத்தை உடனடியாக சென்னைக்கு திருப்பி கொண்டுவந்து, அதோடு விமானம் அவசரமாக தரையிறங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் துரிதமாக செய்யப்பட்டன.

விமானம் இன்று காலை 9.05 மணிக்கு, சென்னை விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறங்கியது. தொடர்ந்து பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு, சென்னை விமான நிலைய ஓய்வறைகளில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அதோடு விமானத்தை பழுது பார்க்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. விமானம் பழுது பார்க்கப்பட்டு அதே விமானமோ, அல்லது மாற்று விமானம் மூலமாகவோ, பயணிகள் பெங்களூர் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தரப்பில் கூறுகின்றனர். இச்சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags :
Advertisement