Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

பிரதமர் மோடிக்கு எலான் மஸ்க் வாழ்த்து!

06:44 AM Jun 08, 2024 IST | Web Editor
Advertisement

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள நரேந்திர மோடிக்கு டெஸ்லா மற்றும் எக்ஸ் உரிமையாளரான எலான் மஸ்க் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

Advertisement

நாடு முழுவதும் நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த 4-ம் தேதி வெளியானது. 543 மக்களவைத் தொகுதிகளில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றது. இதனையடுத்து வரும் ஜூன் 9-ம் தேதி மோடி பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

நேற்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து, பிரதமர் மோடி பதவி ஏற்க உரிமை கோரியுள்ளார். இதனையடுத்து மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்கும் மோடிக்கு பலரும் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தொழிலதிபர் எலான் மஸ்க் தனது வாழ்த்தினை பிரதமர் மோடிக்கு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில்,

“உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேர்தலில் உங்களது வெற்றிக்கு வாழ்த்துக்கள் நரேந்திர மோடி! இந்தியாவில் எனது நிறுவனங்கள் உற்சாகமான பணிகளைச் செய்ய ஆவலுடன் காத்திருக்கின்றன” இவ்வாறு எலான் மஸ்க் பதிவிட்டுள்ளார்.

Tags :
Election2024elon muskNarendra modiParlimentary Electionprime ministerWishes
Advertisement
Next Article