Homeமுக்கியச் செய்திகள்தேர்தல் 2024இந்தியாதமிழ்நாடுஉலகம்விளையாட்டுசினிமாகுற்றம்கட்டுரைகள்பக்தி
Advertisement

#Diwali சிறப்பு பேருந்துகள் | எந்தெந்த ஊருக்கு எங்கிருந்து பேருந்து? முழு விவரம்!

04:09 PM Oct 26, 2024 IST | Web Editor
Advertisement

தீபாவளியை முன்னிட்டு அக்.28 முதல் 30-ம் தேதி வரை சென்னையில் உள்ள 3 பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

தீபாவளி பண்டிகைக்காக சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தங்கியிருக்கும் பொதுமக்கள் தங்கள் சொந்த ஊா்களுக்கு செல்வது வழக்கம். தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு வரும் அக்டோபர் 31ம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு மறுநாள் அரசு விடுமுறை என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள நிலையில், தொடந்து 4 நாட்கள் விடுமுறையாக உள்ளது. இதனால் சென்னையிலிருந்து சொந்த ஊா்களுக்குச் செல்பவா்களின் வசதிக்காக 3 நாட்கள் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் கூடுதல் சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தீபாவளியை முன்னிட்டு அக்.28 முதல் 30-ம் தேதி வரை மூன்று பேருந்து நிலையங்களிலிருந்து இயக்கப்படும் பேருந்துகளின் விவரங்களை அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் R. மோகன் தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள் : “மக்கள் பிரதிநிதியாக எனது பயணத்தில் வழிகாட்டியாக இருப்பீர்கள்” – வயநாடு மக்களுக்கு #PriyankaGandhi கடிதம்!

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது :

"கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் (KCBT), கிளாம்பாக்கம் :

திருச்சி, கரூர், மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில், மார்த்தாண்டம், திருவனந்தபுரம், காரைக்குடி, புதுக்கோட்டை, திண்டுக்கல், தேனி, திருப்பூர், பொள்ளாச்சி, ராமேஸ்வரம், சேலம், கோயம்புத்தூர், எர்ணாகுளம், திண்டிவனம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருக்கோவிலூர், விருத்தாச்சலம், அரியலூர், திட்டக்குடி, செந்துறை, ஜெயங்கொண்டம், போளூர், வந்தவாசி மற்றும் திண்டிவனம் வழியாக திருவண்ணாமலை, புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் மற்றும் திண்டிவனம் வழியாக பண்ருட்டி, நெய்வேலி, வடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் செல்லும் பேருந்துகள் திண்டிவனம், விக்கிரவாண்டி, பண்ருட்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் மார்கமாக பட்டுக்கோட்டை, மன்னார்குடி செல்லும் அனைத்து வழித்தட பேருந்துகள் வழக்கம் போல் இயக்கப்படும்.


புரட்சித்தலைவர் டாக்டர் எம்.ஜி.ஆர். பேருந்து நிலையம் : கோயம்பேடு

வேலூர், ஆரணி, ஆற்காடு, திருப்பத்தூர், காஞ்சிபுரம், செய்யாறு, ஓசூர் மற்றும் பெங்களூர் செல்லும் பேருந்துகள் மற்றும் திருத்தணி வழியாக திருப்பதி செல்லும் பேருந்துகள் மற்றும் கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் புதுச்சேரி, கடலூர், சிதம்பரம், மயிலாடுதுறை, கும்பகோணம், நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, வேதாரண்யம். திருவாரூர் மற்றும் திருத்துறைபூண்டி செல்லும் பேருந்துகள்.

மாதவரம் புதிய பேருந்து நிலையம் :

பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, ஊத்துக்கோட்டை மற்றும் செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் பேருந்துகள் மற்றும் வழக்கமாக இயக்கப்படும் திருச்சி, சேலம், கும்பகோணம் மற்றும் திருவண்ணாமலை பேருந்துகள்.

எனவே ,பயணிகள் மேற்கண்ட பேருந்து நிலையத்திலிருந்து 28/10/2024 முதல் 30/10/2024 வரை ஆகிய நாட்களில் பயணம் மேற்கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும், 30/10/2024 கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்த்து 27/10/2024 மற்றும் 28/10/2024 ஆகிய நாட்களில் தங்கள் பயணத்தை முன்கூட்டியே திட்டமிட்டு முன்பதிவு செய்து பணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் "

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
BusesChennaiDiwaliNews7Tamilnews7TamilUpdatesTamilNaduthree bus stations
Advertisement
Next Article